twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேமராவுடன் தடுமாறி விழப்போன ரவிவர்மன்.. பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்!

    |

    சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது பொன்னியின் செல்வன் படம்.

    இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

    படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    விக்ரம், பொன்னியின் செல்வனை தொடர்ந்து அதிரடி பிரமோஷனில் சர்தார் படம்.. அட இப்படிகூட பண்ணலாமா! விக்ரம், பொன்னியின் செல்வனை தொடர்ந்து அதிரடி பிரமோஷனில் சர்தார் படம்.. அட இப்படிகூட பண்ணலாமா!

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்

    நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். தனது கனவு பிராஜெக்ட்டிற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார்.

    வடிவம் கொடுத்த மணிரத்னம்

    வடிவம் கொடுத்த மணிரத்னம்

    அமரர் கல்கியின் நாவலுக்கு மணிரத்னம் இந்தப் படத்தின்மூலம் வடிவம் கொடுத்துள்ள நிலையில், படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள், பிரம்மாண்டம் உள்ளிட்டவை படத்தின்மீது ரசிகர்கள் அதிகப்படியான ஆர்வம் காட்ட முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. வெறும் 150 நாட்களில் இந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் மணிரத்னம் இயக்கியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    சிறப்பான கேரக்டர் தேர்வு

    படத்தின் நடிகர்கள் தேர்வும் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைந்துள்ளது. முன்னணி நடிகர்களை கொண்டு இந்தப் படத்தில் களமிறங்கியுள்ள மணிரத்னம், அவர்களை அந்தக் கேரக்டர்களாகவே உலவ விட்டிருப்பதும் படத்திறன் சிறப்பிற்கு மேலும் காரணமாக அமைந்துள்ளது.

    6 மாத மெனக்கெடல்

    6 மாத மெனக்கெடல்

    இந்தப் படத்திற்காக அதன் கேரக்டருக்காக 6 மாத காலங்கள் தன்னை தயார் படுத்திக் கொண்டதாக நடிகர் ஜெயம்ரவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். படத்திற்காக வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளையும் தான் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் உடல்மொழியாகவும் அரசனை வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

    ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

    ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

    இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். அவரது இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவிவர்மன். அவரது கேமரா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், அதற்காக அவரது மெனக்கெடல்களையும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    சூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்

    சூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்


    இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் கேமராவுடன் தவறி விழவிருந்த சூழலையும் அதன் வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சண்டையின்போது வீரர்கள் கீழே விழுந்துக் கிடக்க, ஜெயம்ரவி சண்டைக்கான மும்முரத்தில் காணப்படுகிறார்.

    கீழே விழப்போன ரவிவர்மன்

    கீழே விழப்போன ரவிவர்மன்

    அவரை படம்பிடிக்கும் அவசரத்துடன் ரவிவர்மன் தன்னுடைய கேமராவுடன் அவரை பின்தொடர்கிறார். அப்போது கீழே பார்க்காமல் கேமராவிலேயே கவனம் செலுத்திய அவர், ஒரு கட்டத்தில் கேமராவுடன் தடுமாறி கீழே விழப்போக அவரது உதவியாளர் ஒருவர் உடடினயாக வந்து அவரை பிடிப்பதாக அந்த வீடியோ காணப்படுகிறது.

    ரவிவர்மனின் ஆர்வம்

    ரவிவர்மனின் ஆர்வம்

    இந்த வீடியோ மூலம் ஒரு காட்சியை படம்பிடிக்கும் அவரது ஆர்வம் வெளிப்படுகிறது. நடிகர்கள், இயக்குநர்களை காட்டிலும் ஒரு காட்சி சிறப்பாக அமைய ஒளிப்பதிவாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பது இதன்மூலம் தெரியவருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக லைக் செய்துள்ளனர்.

    English summary
    Cinematographer Ravi varman shared interesting event in Ponniyin selvan shootin spot
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X