twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசுரன் ஒளிப்பதிவு.. வேல்ராஜுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. மாஸ் காட்டும் விஐபி இயக்குநர்!

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேல்ராஜுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    இயக்குநர் வெற்றிமாறனின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ், பல படங்களில் தனது லென்ஸ் வழியே மிரட்டலான வித்தியாசமான பல்வேறு காட்சி படைப்புகளை படைத்துள்ளார்.

    வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் வெற்றி இயக்குநராகவும் வலம் வரும் வேல்ராஜுக்கு கிடைத்துள்ள இந்த புதிய கெளரவத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அசுரன் தந்த அங்கீகாரம்

    அசுரன் தந்த அங்கீகாரம்

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பசுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் அசுரன். அந்த படத்தில் புழுதி பறக்கும் காட்சிகளையும், வெறித்தனமான சண்டைக் காட்சிகளையும் தத்ரூபமாக படமாக்கி இருந்தார் வேல்ராஜ்.

    இனி வேல்ராஜ் ISC

    இனி வேல்ராஜ் ISC

    Indian Society of Cinematographers (ISC) என்ற அங்கீகாரம் தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. அசுரன் படத்தின் இரவு காட்சிகளுக்கு அவர் செய்த ஒளிப்பதிவு, உலகளவில் பிரசித்தி பெற்ற துருக்கி மொழி படமான 'Once Upon a Time in Anatolia' படத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி காம்போ

    வெற்றி காம்போ

    பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என விசாரணை படத்தை தவிர்த்து அனைத்து வெற்றிமாறன் படங்களுக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு இவரது பங்கு அதிகளவில் இருக்கிறது. ஒளிப்பதிவாளர்களில் இயக்குநர் ஆன பெருமையும் இவருக்கு உண்டு.

    விஐபி இயக்குநர்

    விஐபி இயக்குநர்

    வெற்றிமாறன் படங்களை தாண்டியும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வை ராஜா வை, சங்கத்தமிழன், எங்கேயும் எப்போதும், கடைக்குட்டி சிங்கம் படங்களின் தரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளின. பொல்லாதவன் படத்தில் இருந்து தனுஷ் உடன் டிராவல் பண்ண வேல்ராஜ், 2014ம் ஆண்டு வெளியான தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.

    Recommended Video

    Ken Karunas 19th Birthday celebration | Chidambharam | Lock Down Diaries
    அந்த பட்டியலில்

    அந்த பட்டியலில்

    தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர்களான கே.வி. ஆனந்த், ராஜிவ் மேனன், ரவி கே சந்திரன், ரவி வர்மன், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ISC அங்கீகாரம், தற்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ISC அமைப்பின் தலைமையிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Indian Society of Cinematographers (ISC) has recognised the notable Tamil cinema cinematographer Velraj who has worked majorly in Vetri Maaran films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X