இரண்டவதாக கமிட்டான ஒளிப்பதிவாளரும் திடீர் விலகல்... செல்வராகவன் படத்திற்கு தொடரும் சிக்கல்!

சென்னை: செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவன் இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர், எழுத்தாளர் என பல முகங்களையும் கொண்டுள்ளார்.

பீஸ்ட் படத்தில்..

பீஸ்ட் படத்தில்..

சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார் செல்வராகவன். மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் செல்வராகவன்.

படப்பிடிப்பு விறுவிறுப்பு

படப்பிடிப்பு விறுவிறுப்பு

தற்போது தனது தம்பி தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரவிந்த் கிருஷ்ணா விலகல்

அரவிந்த் கிருஷ்ணா விலகல்

இந்நிலையில் நானே வருவேன் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 'நானே வருவேன்' படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், அவருக்கு பதில் 'சாணிக்காயிதம்' என்ற படத்தை ஒளிப்பதிவு செய்த யாமினி ஒப்பந்தமானார்.

யாமினி விலகல்

யாமினி விலகல்

'சாணிக்காயிதம்' படத்தை பார்த்து பிரமித்து போன செல்வராகவன், தனது படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் யாமினியும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 'செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்கள்

தவிர்க்க முடியாத காரணங்கள்

நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'நானே வருவேன்' படத்தில் இருந்து நான் விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி', என்று கூறியுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்தில் இருந்து விலகி இருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X