»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரியில் "சிட்டிசன்" திரையிடப்பட்ட தியேட்டர் அருகே ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்தத் தியேட்டருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் விஜய் நடித்த "பத்ரி" படம் இதே தியேட்டரில் திரையிடப்பட்ட போது, விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றுகேட்டிருந்தார் இந்தத் தியேட்டரின் அதிபர். இதனால் தியேட்டருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

"சிட்டிசன்" ரிலீஸான அன்று முதல் காட்சிக்கு இத்தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.தியேட்டருக்குள் சென்ற அவர்கள், விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அஜீத்தின் ரசிகர்கள் 2 கோஷ்டிகளாகப் பிரிந்து, படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விசில் அடித்து ஆர்ப்பாட்டம்செய்தனர். அவர்கள் பலமுறை மோதிக் கொள்ளும் சூழ்நிலையும் உருவானது. அப்போதெல்லாம் உடனடியாகபோலீஸார் விரைந்து சென்று அவர்களைச் சமாதானப்படுத்தி வந்தனர்.

அந்தக் காட்சி முடிந்தவுடன், ரசிகர்களில் ஒரு கோஷ்டியினர் வேகமாக வெளியேறி, தியேட்டரின் வெளியே நின்றுகொண்டனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்த கோஷ்டியினரும் வெளியே வந்தனர். அப்போது, முதல்கோஷ்டியினர் இவர்கள் மீது சோடா பாட்டில்களை வீசத் தொடங்கினர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது கோஷ்டியினரும் சோடா பாட்டில் வீச்சில் ஈடுபட்டனர். இதனால்அந்தச் சாலையில் பெரும் பீதி ஏற்பட்டது. சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டுஓடினர்.

இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டன. சுமார் 15 நிமிடங்களுக்குஇந்தக் கலவரம் நீடித்தது. இதில் 2 அஜீத் ரசிகர்கள் காயமடைந்தனர்.

மோதலில் ஈடுபட்ட ரசிகர்களை அடித்து விரட்டிய போலீஸார், அவர்களைத் தப்பிக்கவும் விட்டுவிட்டனர்.தற்போது, அவர்களைத் தேடி வருகின்றனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil