ஆதி தடகள வீரராக நடிக்கும் "கிளாப்" டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த நடிகர் ஆதி சர்ரேநோடு, நின்னுக்கோரி, ரங்கஸ்தளம் ஆகியப் படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குட்லக் சாகி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து பிரபலமாக உள்ள இவர் இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக தெலுங்கில் இயக்கும் படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ப்ரிதிவ் ஆதித்யா இயக்கத்தில் ஆதி தடகள வீரராக நடித்து வந்த கிளாப் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி இப்பொழுது வெளியாகி உள்ளது.

ஹாரர் த்ரில்லர்

ஹாரர் த்ரில்லர்

தென்னிந்திய சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆதி தமிழ் சினிமாவிற்கு மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பலரும் நடிக்க தயங்கும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆதி அதைத்தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக மாறினார். இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ஈரம் ஆதிக்கு மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானது இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சிந்து மேனன் நடித்திருந்தார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

அய்யனார்,ஆடுபுலி ஆட்டம்,அரவான் என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான வேடங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் ஆதி இப்போது படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் . தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்ரேநோடு மற்றும் நானியின் நடிப்பில் வெளியான நின்னுக்கோரி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஆதி தன்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் சிறிய கதாபாத்திரம் என்றால் நடிக்க தயார் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்பு தோற்றங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம் திரைப்படத்தில் ராம் சரணுக்கு அண்ணனாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

தடகள வீரராக

தடகள வீரராக

ஆதி தமிழில் இப்பொழுது கிளாப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆதி தடகள வீரராக நடித்திருக்க அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு,நாசர்,முனிஸ்காந்த்,மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ப்ரிதிவ் ஆதித்யா இப்படத்தை த்ரில்லர் படமாக இயக்கி உள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு மொத்தமும் எடுக்கப்பட்டுள்ளது.

கிளாப்

கிளாப்

சென்ற ஆண்டே படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென பரவிய கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா முதல் அலை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே ஆதி தன்னுடைய கட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கினார். இதேபோல யோகி பாபுவும் டப்பிங் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இப்பொழுது கிளாப் முழுமையாக ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதுவரை பல விதமான வேடங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக த்ரில்லர் கதை களத்தில் தடகள வீரராக ஆதி நடித்துள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ப்ரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டீசர் அப்டேட்

டீசர் அப்டேட்

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கிளாப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. தொடர் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இந்த காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதை அடுத்து திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது கிளாப் படமும் ரிலீஸுக்கு தயாராகி இருக்க டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை புதிய போஸ்டர் உடன் படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியை தவிர்த்துவிட்டு நேரடியாக திரையரங்கில் மட்டுமே வெளியாகிறது.

வில்லனாக நடிக்கிறார்

வில்லனாக நடிக்கிறார்

ஆதிக்கு தமிழில் கடைசியாக மரகத நாணயம் வெளியானது. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதி நடித்திருக்கும் கிளாப் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து இருக்கும் குட்லக் சகி படத்தில் ஆதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் மற்றும் இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக இயக்கும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவும் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பும் முழுவீச்சில் ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X