»   »  கோள்மூட்டிய "அப்பாடக்கர்" ஜெயம் ரவி:... சிண்டைப் பிடித்த அஞ்சலி-திரிஷா!

கோள்மூட்டிய "அப்பாடக்கர்" ஜெயம் ரவி:... சிண்டைப் பிடித்த அஞ்சலி-திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பாடக்கர் படத்தின் ஹீரோ ஜெயம் ரவியை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில் திரிஷா, அஞ்சலி இடையே மோதல் வெடித்ததாம். இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்ட ஜெயம்ரவி கடைசியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளாராம் இயக்குநர் சுராஜ்

அலெக்ஸ் பாண்டியன்' படத்திற்கு பிறகு சுராஜ் மிக கவனத்துடன் இயக்கி வரும் படம் ‘அப்பாடக்கர்'. இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூரி உட்பட பலர் நடித்து வருகின்றனர். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைக்கிறார்.

கடந்த ஜூலையில் சென்னையில் படப்பிடிப்பைத் துவங்கிய இப்படம், அதன் பிறகு பாண்டிச்சேரியில் சில பகுதிகளில் தனது இரண்டாவது ஷெட்யூலை முடித்தது. பின்னர் ஜெயம் ரவி, சூரி, அஞ்சலி ஆகியோர் பங்குபெற்ற 3வது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் கதை பற்றிய ஒரு சுவாரஸ்யம் வெளியாகியுள்ளது.

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

பொள்ளாச்சி அருகே வேலையில்லாமல் சுற்றித்திரியும் ஜெயம் ரவி, கிராமத்து பெண்ணான அஞ்சலியை பொழுதுபோக்கிற்காக காதலிக்கிறார். ஆனால் அஞ்சலியோ உண்மையென்று நம்பி தீவிரமாக காதலிக்கிறார்.

திரிஷா உடன் காதல்

திரிஷா உடன் காதல்

பிறகு சென்னை செல்லும் ஜெயம் ரவி த்ரிஷா மீது நிஜமான காதல் கொள்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கு த்ரிஷாவுக்கும் அஞ்சலிக்கும் மோதல் வெடிக்கிறது.

அஞ்சலி சூரி ப்ளான்

அஞ்சலி சூரி ப்ளான்

இதனிடையே அஞ்சலியும், சூரியும் ஜெயம்ரவியை சென்னையில் சந்தித்து ரவி, த்ரிஷா காதலை உடைக்க பிளான் போடுவதும், அது சொதப்புவதுமான ஜாலியான கதைதான் படமாம். இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார்.

நாய்கள் மேல் பிரியம்

நாய்கள் மேல் பிரியம்

இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு நாய்கள் பிரியம் வைத்திருக்கும் ஒரு மாடல் கேர்ள் வேடம் என்று கூறப்படுகிறது.

சொந்த கதைபோல

சொந்த கதைபோல

இந்த படத்தில் இடம்பெறும் பல காட்சிகள் தன்னுடைய நிஜவாழ்விலும் நடந்துள்ளதாகவும், இந்த படத்தின் காட்சிகளில் தான் மிகவும் ரசித்து நடித்ததாகவும் த்ரிஷா கூறியுள்ளார்.

சூரியும் ஹீரோ ரேஞ்ச்

சூரியும் ஹீரோ ரேஞ்ச்

அப்பாடக்கரில் ஹீரோ ஜெயம் ரவிக்கு இணையாக அசத்தலாக நடத்துள்ளார் காமெடியன் சூரி.

அஞ்சலி - த்ரிஷா

அஞ்சலி - த்ரிஷா

பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு மீண்டு வந்திருக்கிற அஞ்சலி இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். நிச்சயம் முடித்து, திருமணத்தை அறிவித்து விட்ட த்ரிஷா தற்போது நடித்து வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

English summary
Appatakkar is an Upcoming Tamil Movie. Directed by Suraj and Produced by Lakshmi Movie Makers. Music by S Thaman. Jayam Ravi, Trisha and Anjali in lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil