twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..!

    கொலையுதிர்காலம் பட விழா மேடையில் தயாரிப்பாளர்கள் சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    |

    Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: நயன்தாராவின் கொலையுதிர் காலம் பட விழாவில், தயாரிப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    கொலையுதிர் காலம் டிரெய்லர் வெளியீட்டு விழா கடுமையான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. காரணம், நடிகை நயன்தாராவை பற்றி ராதா ரவி தெரிவித்த கருத்துக்கள் தான்.

    இந்நிலையில் அன்றைய தினம் மற்றொரு பரபரப்பும் அந்த விழாவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்கம் குறித்தும், விஷால் குறித்தும் கடுமையாக பேசினார்.

    ஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய் ஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்

    மரியாதை இல்லை:

    மரியாதை இல்லை:

    "தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதையே இல்லை. ரூ.4 கோடி பட்ஜெட்டுக்கு கீழ் எடுக்கப்படும் படங்களுக்கு ஒன்றரை கால்ஷீட் சம்பளம் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை அறிவித்தது. ஆனால் அதை பெப்சி நடைமுறைப்படுத்துவது இல்லை.

    ஆண்மகன் தேவை:

    ஆண்மகன் தேவை:

    தயாரிப்பாளர் சங்கத்துக்கு யார் தலைவராக வந்தாலும், அவர்கள் தங்களது கடனை அடைத்துக்கொள்கிறார்கள். இதற்கு முன்னால் இருந்த தலைவரும் சரி, இப்போது இருக்கும் தலைவரும் சரி, தங்களுடைய சுயலாபத்துக்காகதான் சங்கத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு ஆண் மகன் தேவை", என அவர் கடுமையாக பேசினார்.

    பிரவீன்காந்த் பதிலடி:

    பிரவீன்காந்த் பதிலடி:

    அவரை தொடர்ந்து பேசிய விஷால் அணியைச் சேர்ந்த பிரவீன்காந்த், "சங்கத்துக்கு தலைவராக பதவி ஏற்கும்போதும் சரி, இப்போதும் சரி, விஷால் ஆண் மகனாக தான் இருக்கிறார். அவர் நல்லது செய்ய நினைத்தாலும், அவரை செய்யவிடுவதில்லை.

    சிம்பு கால்ஷீட்:

    சிம்பு கால்ஷீட்:

    இங்கு எல்லோருமே சுயநலமாகதான் இருக்கிறார்கள். இப்போது குற்றச்சாட்டு கூறிய சுரேஷ் காமாட்சியும் கூட சுயநலவாதிதான். விஷாலை திட்டி திட்டியே தான் அவர் சிம்புவின் கால்ஷீட்டை வாங்கினார். பிறகு மற்றவர்களை எப்படி அவர் குறை சொல்ல முடியும்", என பதிலடி கொடுத்தார்.

    ஒற்றுமை தேவை:

    ஒற்றுமை தேவை:

    பின்னர் பேசிய தயாரிப்பாளர் துரைராஜ், " தயாரிப்பாளர்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளை நமக்குள் தான் பேசி தீர்க்க வேண்டும். ஒரு அறைக்குள் நடக்க வேண்டிய சண்டையை, வீதியில் நடத்தினால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே தயாரிப்பாளர்கள் ஒன்றுமையாக இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வுகாண முடியும்", என்றார்.

    English summary
    A clash broke out between producers in Nayanthara's Kolaiyuthirkalam trailer launch event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X