Coolie Box Office: தலைவர் மாணிக்கமாவே இருக்கலாம். நான் பாஷாவா மாறுவேன்.. தனஞ்ஜெயனை எச்சரிக்கும் பிரபலம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 14ஆம் தேதி வெளியான படமான கூலி படம் அவரது 50வது ஆண்டு திரை வாழ்க்கை நிறைவு நாளுக்கு ஒருநாள் முன்னர் வெளியானது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, காளி வெங்கட், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது. படத்தில் பாலிவுட் ஹீரோ ஆமிர் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு கேமியோ நடனம் செய்திருந்தார். படம் பாக்ஸ் ஆபிஸில் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய படம் என்ற சாதனையைப் படைத்தது.
அதாவது படம் முதல் நாளில் ரூபாய் 151 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல், படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை வசூலில் அள்ளியதாக படக்குழு தெரிவித்தது, படம் வெளியாகி இன்றுடன் அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் 15 நாட்கள் ஆகிறது. இப்படி இருக்கையில், படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்து வந்த கருத்துகள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரது பி.ஆருமான ரியாஸ் அகமது தனஞ்ஜெயனைக் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ரஜினி ரசிகர்கள் அவரது வீடியோவில் தனஞ்ஜெயனை நோக்கி எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்டு ட்விட்டர் பக்கத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

கேள்விகள்: ரியாஸ் அகமது எழுப்பியுள்ள கேள்விகள்,
1. கூலி தயாரிப்பாளர் நீயா இல்ல கலாநிதி மாறனா ?
2. நீ எப்படி அவார்ட் வாங்கினேனு எனக்கு தெரியாதா ?
3. யாருகிட்ட பணம் வாங்கிட்டு கூலிய பத்தி பேசற ? யாரை திருப்தி படுத்த இப்படி பேசற ?
4. நீ தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ராஜினாமா பண்ணிட்டு பேசு ...
5. தலைவர் வேணா மாணிக்கமாவே இருக்கலாம். ஆனா நான் பாஷாவா மாறுவேன் ..
6. நீ யாரு Distributiorஆ ?
7. இதோட நிறுத்துனா உனக்கு நல்லது. இல்லேனா இன்னும் மோசமா பேச வேண்டி வரும் .. அவர் இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலும் அளித்துள்ளார்.

பதில்: அதில், "பெரிய படங்களை பற்றி நெகட்டிவிட்டி SOCIAL MEDIA-ல பரப்பாதீங்க, படங்களின் கலெக்ஷன் பெருசா பாதிக்கப்படுகிறதுன்னு சில பேட்டிகளில் சொன்னதும் தப்பாயிடுச்சு... யார் படம் எப்படி போன நமக்குன்னு இனிமே இருந்துட வேண்டியது தான். படம் பற்றி என் எந்த பேட்டியும்/கருத்துக்களும் இனி வராது. ரியாஸ் அகமது இது பயந்து ஒதுங்குவது அல்ல. யாரையும், எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்பதற்காக தான்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவர்களுக்கு இடையிலான வார்த்தைப் போரை ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகில் உள்ளவர்களும் கவனித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











