»   »  காசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை

காசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசி கீதம் தொடர்பாக காசி தியேட்டரில் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் 15 பேரிடம் விசாரித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் படம் போடும் முன்பு தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

Clash broke out in Kasi theatre: 15 questioned

இதையடுத்து அனைத்து தியேட்டர்களிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் தேசிய கீதம் இசைத்தபொழுது சிலர் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையாம்.

இது தொடர்பாக தியேட்டரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து படம் பார்க்க வந்த பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் 15 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Chennai police are questioning 15 persons in connection with a clash broke out in Kasi theatre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil