»   »  மாமனார் அமிதாப் அப்படி என்ன சொன்னாரோ, விழுந்து விழுந்து சிரித்த ஐஸ்வர்யா ராய்

மாமனார் அமிதாப் அப்படி என்ன சொன்னாரோ, விழுந்து விழுந்து சிரித்த ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்டார்டஸ்ட் விருது விழாவில் மாமனார் அமிதாப் பச்சன் சொன்ன ஜோக்கை கேட்டு மருமகள் ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

மும்பையில் நடந்த ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழாவில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, இயக்குனர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரியங்கா அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் அமிதாப் பச்சன் அருகில் அமர்ந்திருந்தார். அமிதாப் ஏதோ ஜோக்கடிக்க ஐஸ்வர்யா விழுந்து விழுந்து சிரித்தார்.

கரண்

கரண்

அமிதாப் தனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த கரண் ஜோஹாரை பார்த்து மீண்டும் ஜோக்கடிக்க ஐஸ்வர்யா ராய்க்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்ததால் அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் மீது கோபமாக இருந்ததாக கூறப்பட்டது. விருது விழாவில் அவர்கள் சிரித்து பேசியதை பார்த்தால் அமிதாப் தனது மருமகள் மீது கோபமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

புத்தாண்டு

புத்தாண்டு

ஐஸ்வர்யா ராய் புத்தாண்டை தனது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் வெளிநாட்டில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Aishwarya Rai couldn't control laughter after father-in-law Amitabh Bachchan cracked jokes in the Strardust awards function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil