»   »  டார்ஜிலிங் ஷூட்டிங்கின் போது நிலநடுக்கம்.. தப்பிய தனுஷ்.. அலறிய எமி ஜாக்சன்!

டார்ஜிலிங் ஷூட்டிங்கின் போது நிலநடுக்கம்.. தப்பிய தனுஷ்.. அலறிய எமி ஜாக்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டார்ஜிலிங்கில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினரும் நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் தப்பியுள்ளனர். தற்போது தனுஷ் மற்றும் படக்குழுவினர் பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி பட வெற்றியைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் தனுஷ். பெயரிடப்படாத அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுற்றுலா தளங்களில் ஒன்றான டார்ஜிலிங்கில் நடந்தது.

டார்ஜிலிங்கில் ஷூட்டிங்...

டார்ஜிலிங்கில் ஷூட்டிங்...

தனுஷ், எமி ஜாக்சன், சதீஷ் ஆகிய 3 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், தனுஷ்-எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டது. அனைவரும் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள்.

நேபாள நிலநடுக்கம்...

நேபாள நிலநடுக்கம்...

இந்நிலையில் கடந்தவாரம் நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டார்ஜிலிங்கிலும் உணரப்பட்டது. நடிகர்-நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தங்கியிருந்த ஓட்டல் கட்டிடம் குலுங்கியது.

பயத்தில் அலறிய படக்குழு...

பயத்தில் அலறிய படக்குழு...

பயத்தில் உறைந்து போன படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படக்குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்துள்ளனர். பின்னர் அறைக்குத் திரும்பிய படக்குழு அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டனர்.

லேசான நிலநடுக்கம்...

லேசான நிலநடுக்கம்...

இது தொடர்பாக தனுஷ் கூறுகையில், ‘கடந்த 27-ந்தேதியன்று மாலை 6 மணியளவில் ‘வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அனைவரும் ஓட்டலுக்கு திரும்பினோம். ஓட்டலில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, மாலை 6.30 மணியளவில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

எந்த பாதிப்பும் இல்லை...

எந்த பாதிப்பும் இல்லை...

ஓட்டல் நிர்வாகத்தினர் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியில் கொண்டுவந்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பின், அனைவரும் மீண்டும் ஓட்டலுக்குள் சென்றோம். நிலநடுக்கம் காரணமாக படப்பிடிப்பை அவசரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டோம். நிலநடுக்கத்தில் படப்பிடிப்பு குழுவினர் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

பயத்தில் அலறிய எமி...

பயத்தில் அலறிய எமி...

நிலநடுக்க அனுபவம் குறித்து நடிகர் சதீஷ் கூறுகையில், ‘பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது, நான் ஓட்டலில் படுத்திருந்தேன். கார் டயர்கள் வேகத்தடையில் ஏறி இறங்கினால் எப்படி இருக்குமோ? அதுபோன்று உணர்வு ஏற்பட்டது. அனைவரும் பயத்தில் உறைந்து போனோம். எமி ஜாக்சன் அலறிவிட்டார்'', எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Popular Kolloywood Actor Dhanush, who was shooting in Darjeeling for a Tamil movie, had a close shave as after shocks hit the town last evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil