twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படம்... எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார்!

    By Shankar
    |

    சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். அ பாலகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    காமராஜ் தி கிங் மேக்கர், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக தயாரிக்கிறது.

    CM Edappadi Palanisamy to launch MGR Bio pic

    எம்ஜிஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது.

    எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவ்வாழ்வு மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

    "ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றுத் திரைப்படம் அவரின் நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்," என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

    நவம்பர் 8, புதன்கிழமை படப்பிடிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    English summary
    CM Edappadi Palanisamy will be launched the shooting of MGR's biography movie on Nov 8th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X