இன்று முதல்...விக்ரம் ஃபேன்ஸ் ரெடியா?... கோப்ரா முழு அப்டேட் இதோ

சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Recommended Video

இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

விக்ரம் 20 க்கும் மேற்பட்ட கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றது. இந்த டிரைலர் இதுவரை 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

 தீவிர ப்ரொமோஷனில் விக்ரம்

தீவிர ப்ரொமோஷனில் விக்ரம்

ரிலீசிற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா டீம் கடந்த சில நாட்களாக தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, பெங்களூரு நகரங்களைத் தொடர்ந்து இன்று ஐதராபாத்தில் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்ள உள்ளார்.

 கோப்ரா ரன்னிங் டைம் இவ்வளவா?

கோப்ரா ரன்னிங் டைம் இவ்வளவா?

இந்த சமயத்தில் கோப்ரா படம் பற்றிய இறுதிக்கட்ட அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. கோப்ரா படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 செகண்ட். விக்ரம் கணக்கு மாஸ்டராக, நம்பர்களை வைத்து கொலை செய்யும் கேரக்டரில் நடித்திருப்பதால் எண்களை வைத்து விளையாட்டு ஆரம்பம் 333 ரன்னிங் டைம் என ஸ்பெஷல் க்ளிம்ப்ஸ் உடன் வெளியிட்டுள்ளது.

விக்ரம் வெளியிட்ட வீடியோ

விக்ரம் வெளியிட்ட வீடியோ

இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சைக்கிளில் வரும் இளைஞன் ஒருவன், கோப்ரா பட போஸ்டரை ஒட்டுகிறான். அந்த போஸ்டரில், இன்று முதல் ரிசர்வேஷன் ஆரம்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது.கோப்ரா படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி விட்டதை வித்தியாசமான வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.

FDFS புக் பண்ணியாச்சு தலைவா

FDFS புக் பண்ணியாச்சு தலைவா

இதை பார்த்த ரசிகர்கள், FDFS புக் பண்ணியாச்சு தலைவா என கமெண்ட் செய்ததுடன், கோப்ரா படத்தின் FDFS விற்கு புக் செய்த டிக்கெட்களையும் போட்டோ எடுத்து விக்ரம் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.இன்னும் சிலர் உணர்ச்சி மிகுதியால், தலைவா...நீ நிம்தியா தூங்கு தலைவா...இனிமே நாங்க பாத்துக்குறோம் எல்லாத்தையும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X