விக்ரமின் கோப்ரா ரிலீஸ்...ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நாள் இன்னைக்கு வந்தாச்சு

சென்னை : இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்திருக்கிறார் என சொல்லப்பட்டது.'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில் 'கோப்ரா' படத்தின் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

எதிர்பார்ப்பை கிளப்பிய பாடல்கள்

எதிர்பார்ப்பை கிளப்பிய பாடல்கள்

இதைத் தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கோப்ரா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எப்போது படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அவர் வில்லன் கிடையாது

அவர் வில்லன் கிடையாது

கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், இந்த படத்தில் இர்ஃபான் பதான் வில்லன் கிடையாது. அவர் படத்திலும் ஆல் ரவுண்டர் தான் என தெரிவித்தார். இதனால் இர்ஃபான் இல்லை என்றால், வேறு யார் வில்லன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த சமயத்தில் கோப்ரா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக தகவல் பரவியது.

தள்ளி வைக்கப்பட்ட கோப்ரா ரிலீஸ்

தள்ளி வைக்கப்பட்ட கோப்ரா ரிலீஸ்

ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீசை அறிவித்த கார்த்தியின் விருமன் படத்தை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 12 ம் தேதி விருமன் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 ரிலீஸ் தேதியை சொல்லவேயில்லையே

ரிலீஸ் தேதியை சொல்லவேயில்லையே

ஆனால் கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது என இதுவரை இறுதியாக அறிவிக்கவில்லை. இதனால் கோப்ரா படத்தை எப்போ தான் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆடியோ வெளியீட்டிற்கு பிறகு படம் எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Recommended Video

Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
அந்த நாள் இன்னைக்கு தான்

அந்த நாள் இன்னைக்கு தான்

இந்நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த சமயத்தில் கோப்ரா ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X