For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்பா கடின உழைப்பாளி..கொஞ்சம் கூட எனர்ஜி குறையவே இல்லை..துருவ் விக்ரம் வியப்பு!

  |

  சென்னை : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோப்ரா.

  Recommended Video

  Dhruv Vikram Speech | நீங்க கூப்பிடலனாலும் வந்திருப்பேன் | Cobra Trailer Launch | * Launch

  விக்ரம் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்தவாரம் ஆக., 31ல் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.

  டிரைலர் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு பேசிய,துருவ் விக்ரம், என் அப்பா ஒரு கடுமையான உழைப்பாளி அவர் எப்போது எனர்ஜியாகவே இருப்பார் என்றார்.

  கேரள மார்க்கெட்டை குறிவைக்கும் தமிழ் சினிமா.. நட்சத்திரம் நகர்கிறது.. கோப்ரா படங்களின் பிரமோஷன்கள்! கேரள மார்க்கெட்டை குறிவைக்கும் தமிழ் சினிமா.. நட்சத்திரம் நகர்கிறது.. கோப்ரா படங்களின் பிரமோஷன்கள்!

  கோப்ரா

  கோப்ரா

  சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் 'கோப்ரா' டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  நடிகர் துருவ் விக்ரம்

  நடிகர் துருவ் விக்ரம்

  இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துருவ் விக்ரம், இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவும், பெருமிதமாகவும் நான் கருதுகிறேன். நடிகனாக இல்லாதிருந்தாலும், ரசிகனாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் கோப்ரா படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், கோப்ரா என்ன ஸ்பெஷல்? என கேட்டேன். அஜய், அஜயின் விஷன். கிரியேட்டிவிட்டி.. கதையை சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் திரையரங்கத்தில் ஒரு திரைப்படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும் என்றார்.

  ரசிகர்களுக்கு பிடிக்கும்

  ரசிகர்களுக்கு பிடிக்கும்

  எனக்கும் கோப்ரா படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் இந்தப் படத்தின் அஜய் மற்றும் அப்பா ஆகிய இருவரும் தங்களுடைய கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநர் அஜயின் கற்பனையை திரையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்பா கடினமாக உழைத்திருக்கிறார்.

  அப்பா கடின உழைப்பாளி

  அப்பா கடின உழைப்பாளி

  என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் மகான் படத்தில் நடித்த போது அவரிடம் ஒரு விசயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம். ஒரு நேரத்தில் நான் மிகவும் சோர்ந்து போய்விட்டேன். ஆனால் அப்பா புல் எனர்ஜியோட இருந்தாரு. அப்போது அவரிடம், அப்பா எனக்கே எனர்ஜி போய்டுச்சி, நீ எப்படி இவ்வளவு எனர்ஜியோட இருக்கனு கேட்டேன்.

  கோப்ரா வெற்றி பெறும்

  கோப்ரா வெற்றி பெறும்

  அதற்கு அவர், சினிமாவில் இந்த இடத்தை அடைய நான் மிகவும் கஷ்டப்பட்டேன், பல கடுமையான போராட்டத்தை சந்தித்தேன். அதனால், இது எல்லாம் எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை என்று பதிலளித்தார். அவர் பேசி முடித்ததும், அவர் கூறியதை பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். அவர்,ஒரு சிறப்பு மிக்க மனிதர். இதன் காரணமாகவே அவர் நடித்திருக்கும் 'கோப்ரா' மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  கே ஜி எஃப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் கோப்ராவில் நடித்திருக்கும் உங்களுக்கும் இங்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி ஆகிய இருவரும் இந்த படத்தில் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என நம்புகிறேன்.

  English summary
  Cobra Trailer Launch event Dhruv Vikram speech : கோப்ரா டிரைலர் வெளியீட்டு விழா, துருவ் விக்ரம் பேச்சு
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X