For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்ரமின் கோப்ரா டிரைலர் எப்படி இருக்கு?...ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன?

  |

  சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. நீண்ட நாட்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அந்த பிரம்மாண்ட படம் தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது.

  Recommended Video

  இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood

  கோப்ரா படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டிமின்டிரி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞான முத்து அதே பாணியில் த்ரில்லர், ஆக்ஷன் கலந்த படமாக கோப்ரா படத்தை உருவாக்கி உள்ளார்.

  இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் விக்ரம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோப்ரா டூர் பட்டியல் தென்னிந்தியா முழுவதும் உள்ள விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட உள்ளது.

  உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும்.. ஹி ஈஸ் கோப்ரா.. மிரட்டலான ட்ரெயிலர் இதோ! உருமாறி போகவும் தெரியும்.. பதுங்கி அடிக்கவும் தெரியும்.. ஹி ஈஸ் கோப்ரா.. மிரட்டலான ட்ரெயிலர் இதோ!

  கோப்ரா டிரைலர் வெளியீடு

  கோப்ரா டிரைலர் வெளியீடு

  கோப்ரா ரிலீசிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரம்மாண்ட டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற கோப்ரா டிரைலர் வெளியீட்டு விழாவில் விக்ரம், துருவ் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அசத்தினர்.

  கணக்குல எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

  கணக்குல எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

  எல்லா பிரச்சனைக்கும் கணக்கில் தீர்வு இருக்கும் என்ற ட்வீட்டுடன் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கிட்டதட்ட 20 வித்தியாசமான அவதாரங்களில் தோன்றி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக்ஷன் - த்ரில்லர் படமான இந்த படம் 90 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

  கோப்ரா டிரைலர் எப்படி இருக்கு?

  கோப்ரா டிரைலர் எப்படி இருக்கு?

  விக்ரம் 20 கேட்அப்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் டிரைலரை பல தோற்றங்கள் இது விக்ரம் தானா என பிரம்மிக்க வைக்கிறது. அந்த அளவிற்கு இசை மற்றும் விஷுவலில் பட்டையை கிளப்பி உள்ளனர். டிரைலரின் ஆரம்ப சீனும், கடைசி சீனும் அந்நியன் படத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதே சமயம் டிரைலரின் ஒவ்வொரு ஷாட்டும், ஆக்ஷன் காட்சிகளும் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  விக்ரம் கேரக்டரா வாழ்ந்திருக்கார்

  விக்ரம் கேரக்டரா வாழ்ந்திருக்கார்

  டிரைலரின் ஆரம்பத்தில் விக்ரமை தலைகீழாக கட்டி வைத்து அடிக்கிறார்கள் சரி, இடையில் ஒரு ஷாட்டிலும் பல மாடி கட்டிடத்தின் மேல் கிரைனில் தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளதை எல்லாம் டிரைலரின் பார்க்கும் போதே பகீரென்று இருக்கு. பெரிய திரையில் பார்த்தால் இன்னும் எப்படி இருக்கும். விக்ரமிற்கு நடிப்பின் மீதான தீராத காதல்...அவர் நடிப்பை சுவாசமாக பார்ப்பது என அனைத்தும் இந்த டிரைலரில் ஒவ்வொரு கேரக்டரிலும் அவர் வாழ்ந்திருப்பது தெரிகிறது என்றே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

  டிரைலரில் என்ன இருக்கு

  டிரைலரில் என்ன இருக்கு

  டிரைலர் படி பார்த்தால், கணக்கு வாத்தியாரான விக்ரம், கணக்கையும், எண்களையும் பயன்படுத்தி நூதனமான முறையில் கொலை செய்வது தான் கதை. கோப்ரா கேரக்டரில் விதவிதமான வேடங்களில் சென்று கொலை செய்கிறார்.அவரது காதலியான ஸ்ரீநிதி ஷெட்டி அவரது கண் முன்னாலேயே உயிரிழக்கிறார். ஆனால் இந்த கொலைகள் எதற்காக செய்கிறார். கணக்கு வாத்தியாரான அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை என தெரிகிறது. இதை த்ரில்லிங், ஆக்ஷன் கலந்து சொல்லி உள்ளனர் என்பது தெரிகிறது. இர்ஃபான் பதான் போலீஸ் அதிகாரியா, வில்லனா என தெரியவில்லை. அவரை பார்த்தால் வில்லன் ஃபீல் வரவில்லை.

  என்ன தாம்ப்பா கதை

  என்ன தாம்ப்பா கதை

  அந்நியன் படம் போல் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இன்னொரு உருவில் சென்று கொலை செய்கிறாரா? அல்லது இது வேறு கதையா என்பது தெரியவில்லை. இது போன்ற அடுத்தடுத்த த்ரில்லிங், சஸ்பென்ஸ் ஷாட்கள் படத்தின் கதை என்னவாக இருக்கும்? எதற்காக உலகம் முழுவதும் செல்கிறார்கள்? விக்ரம் பல கெட்அப்களுக்கு மாறுகிறார்? என்ற கேள்விகளுக்கு விடையை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

  English summary
  Vikram's Cobra movie trailer released today. This event was held in Chennai. Here we discussed and shared fans opinion about Cobra movie trailer. This trailer attracts each and everyone. Fans are eagerly waiting to watch the full movie in big screens.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X