twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சு பொறுக்குதில்லையே: ட்விட்டரில் கொந்தளிக்கும் விக்னேஷ் சிவன்

    By Siva
    |

    சென்னை: கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கொடூர செய்தி அறிந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வேதனை அடைந்துள்ளார்.

    கோவையில் காணாமல் போன 6 வயது சிறுமி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

    இது குறித்த செய்தியை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபமாக ட்வீட் செய்துள்ளார்.

    இடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி இடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி

    விக்னேஷ் சிவன்

    நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

    இது போன்ற விஷயங்களில் விரைந்து தண்டனை அளிக்க வேண்டும். தினமும் பெண்களுக்கு எதிராக ஏதாவது கொடுமை நடக்கிறது. ட்வீட் செய்வதை விட்டுவிட்டு ஏதாவது பயனுள்ளதாக செய்ய வேண்டும் என்கிறார் விக்னேஷ் சிவன்.

    நயன்தாரா

    நயன்தாரா

    நயன்தாராவை ராதாரவி அசிங்கமாக பேசியபோது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரிடம் புகார் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். மேலும் ராதாரவியை விளாசி பல ட்வீட்டுகள் போட்டார் அவர்.

    பாராட்டு

    பாராட்டு

    காதலிக்கு ஒன்று என்றால் விக்னேஷ் சிவன் துடித்துப் போகிறாரே என்று சிலர் அவரை பாராட்டினார்கள். சிலரோ எத்தனையோ நடிகைகளை ராதாரவி கேவலப்படுத்தியபோது சும்மா இருந்த நீங்கள் உங்கள் காதலி என்றதும் பொங்குகிறீர்களா என்று கேட்டனர்.

    ஆறுதல்

    ஆறுதல்

    திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் அன்பான இயக்குநரே என்று ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

    English summary
    Vignesh Shivan tweeted that 'Punishments and justice should be givn to issues like raping and killing a child swiftly to restore hope in livelihood! Evryday somethin Terrible is being witnessed against women!'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X