Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அலைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இதை சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பெண்கள் மூடி மூடி வெச்சாத்தான்..திறந்து பார்க்கத் தோன்றும்..கோமாளி பட நடிகை சர்ச்சை பேச்சு!
சென்னை : பெண்கள் மூடி மூடி வெச்சாத்தான் அதை திறந்து பார்க்கத் தோன்றும் என்று கோமாளி பட நடிகை RJ ஆனந்தி பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜேவான ஆனந்தி சூரியன் எஃப்எம் மற்றும் பிக் எஃப்எம்மில் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின் ஒரு சில தொலைக்காட்சிகளில் விஜேவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாக மாறினார்.
இவர் ' The Book Show' என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில் பல படைப்பாளர்களின் புத்தகங்களை ரிவ்யூ செய்து வருகிறார்.
குக்வித்
கோமாளி..
சிரிக்க
ரெடியா
பங்காளி..
அடுத்த
பிரம்மாண்டத்திற்கு
தயாராகும்
சேனல்!

நடிகை RJ ஆனந்தி
சோஷியல் மீடியாவில் பிரபலமான ஆனந்தி பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும், யோகி பாபுவின் மனைவியாக நடித்திருந்தார். அதன் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திலும், தாராளப்பிரபு, டி பிளாக் போன்ற படத்திலும் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆணுக்கு எதிரானது பெண்ணியம் இல்லை
இந்நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள RJ ஆனந்தி, பெண்ணியம் என்பது இன்று ஒரு கெட்ட வார்த்தையாகவே மாறிவிட்டது. பெண்ணியவாதிகள் பெண்ணின் சம உரிமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் நான் பெண்ணியம் பற்றி பேசியதில், புத்தக ரிவியூவில் மட்டுமே பேசி இருக்கிறேன். ஆனால், எனக்கும் பெண்ணிய எண்ணங்கள் இருக்கிறது. ஆணுக்கு எதிரானது பெண்ணியம் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெண்ணை அவமதிக்கும் கெட்டவார்த்தைகள்
சினிமாவில் வரும் பல கெட்டவார்த்தைகள் பெண்களை கொச்சப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. பெண்னை அவமதிக்கும் கெட்டவார்த்தையை ஏன் சினிமாவில் பயன்படுத்த வேண்டும். அதுபோன்ற கெட்டவார்த்தையை சினிமாவில் வைக்காமல் தவிர்க்கலாமே. நான் சந்தித்த 90 சதவீதம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.

சர்ச்சைப்பேச்சு
பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்,ஷால் போட வேண்டும், பின் குத்திக்கொள்ள வேண்டும் என பயமுறுத்தியே வைத்து இருக்கிறார்கள். மூடி மூடி வைப்பது எந்த அளவிற்கு உதவும் என எனக்குத் தெரியவில்லை. ஒரு பையனுக்கு பெண்ணின் உடல் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் அவன், மற்ற பெண்களை பார்க்கும் போது இயல்பாக இருப்பான். ஆனால், மூடி மூடி வைக்கும் போது, அதை திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வரும் என கூறியுள்ளார். நடிகை ஆனந்தி இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.