»   »  'ப்ளீஸ் கம் பேக் கவுதம்மேனன்... வீ வாண்ட் டைரக்டர் கவுதம் அகெய்ன்...!'

'ப்ளீஸ் கம் பேக் கவுதம்மேனன்... வீ வாண்ட் டைரக்டர் கவுதம் அகெய்ன்...!'

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு தனி பங்களா அது... கவுதம் மேனனின் கார் அந்தப் பக்கம் போனால் ஒரு சில நிமிடங்கள் அந்த பங்களாவுக்கு வெளியே நிற்கும். கவுதம்மேனன் அதைப் பார்த்து சில நொடிகளாவது கண் கலங்குவார். பின்னர்தான் கார் புறப்படும். காரணம் அந்த பங்களாவின் முன்னாள் ஓனர் கவுதம் மேனன்தான்.

விண்ணைத் தாண்டி வருவாயா வரை கவுதம் மேனனுக்கு கடன்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் அந்த படத்திற்கு பிறகு நடுநிசி நாய்கள் என்ற படத்தை இயக்கி தயாரித்ததோடு வெப்பம் என்ற படத்தைத் தயாரித்தார். இரண்டு படங்களும் ஏமாற்றியதில் கவுதமுக்கு கடன் சேர்ந்தது. அது இன்றுவரை நீள்கிறது. அந்த கடன்களால்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஆசை ஆசையாக வாங்கி கதை விவாதங்களுக்கெல்லாம் பயன்படுத்திய கிழக்கு கடற்கரை வீட்டை விற்றார்.

Comeback director Goutham Menon

அச்சம் என்பது மடமையடா படமே இந்த ஃபைனான்ஸ் சிக்கலால் பலமுறை நின்று நின்று தயாரானது. படத்துக்கு டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் என்ற பெயரே காணோம். சொந்தமாக தயாரித்த படத்தில் தன்னால் தயாரிப்பாளர் என்று போட்டுக்கொள்ள கூட முடியாத சூழ்நிலை கவுதமுக்கு. அந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ஓரளவுக்கு ஓடியது. ஆனால் இன்னமும் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பள பாக்கி நிற்கிறதாம். பாக்கி என்றால் பாக்கி மட்டுமே அல்ல சிலருக்கு முழு சம்பளமுமே பாக்கி தான்.

இதே நிலைதான் தனுஷ் நடிப்பில் இயக்கி தயாரித்துக்கொண்டிருக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வுக்கும். பழைய சம்பள பாக்கி காரணமாக என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனது ஆஸ்தான டெக்னிஷியன்களுடன் சேர முடியவில்லையாம். எனவே புதுமுக இசையமைப்பாளர் டர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். தாமரை வரிகளில் இரண்டு பாடல்கள் இசையமைப்பாளர் பெயரே சொல்லாமல் வெளியிட்டிருக்கிறார். இரண்டுமே தள்ளிப்போகாதே, ராசாளி அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை.

இன்னும் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகாத நிலையில் திடீரென விக்ரம் நடிக்க துருவ நட்சத்திரம் எடுக்கப்போகிறேன் என்று கிளம்பினார். ஃபைனான்ஸ் வாங்கவே அவசர அவசரமாக டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது என்று செய்தி வந்தது. அதுவும் ஃபைனான்ஸ் பிரச்னையால் நிற்கிறது. விக்ரம் கெட்டப்பை மாற்றி விஜய்சந்தர் படத்துக்கு போய்விட்டார்.

இயக்குநர் கவுதம் மேனனை தயாரிப்பாளர் கவுதம் மேனனின் பிரச்னைகளும் கடன்களும் விழுங்கிக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு நல்ல கலைஞனை நாங்கள் இழக்க விரும்பவில்லை. மீண்டு வாருங்கள் இயக்குநர் கவுதம் அவர்களே!

- ஆர்ஜி

English summary
Director Gouthama Menon, the stylish film maker is losing his ground due to financial crisis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil