»   »  அஜித் படத்தில் அறிமுகமான 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு' டேனியல்!

அஜித் படத்தில் அறிமுகமான 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு' டேனியல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரொம்ப சுமார் மூஞ்சி குமாரின் முதல் படம் தல அஜித்துடன்னா..?

சென்னை : விஜய் சேதுபதியுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக நடித்து கலக்கியவர் டேனியல்.

இவர் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கௌதம் கார்த்திக்கோடு சேர்ந்து செம காமெடி செய்திருந்தார்.

இவர் முதன்முதலில் அறிமுகமானதே அஜித் படத்தில் தானாம். அஜித் படத்தில் சிறிய காட்சியில் நடித்தவர் பல வருடங்கள் கழித்து பிரபலமாகியுள்ளார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய் சேதுபதியுடன் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக நடித்து கலக்கியவர் டேனியல். 'ஃப்ரெண்டு... லவ் மேட்ரு... ஃபீலாகிட்டாப்ள.. ஒரு ஆஃப் சாப்ட்டா கூலாய்டுவாப்ளே' என இவர் பேசிய டயலாக் செம ஹிட்.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

அதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த 'ரங்கூன்' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டினார். சமீபத்தில் வெளிவந்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கௌதம் கார்த்திக்கோடு சேர்ந்து செம காமெடி செய்திருப்பார்.

அறிமுகமே அஜித் படத்தில்

அறிமுகமே அஜித் படத்தில்

இவர் 12-ம் வகுப்பு படிக்கும்போதே தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். 'பரமசிவன்' படத்தில் ஒரு காட்சியில் போலீஸ் கைதி உடையுடன் ஓடிவருவது போல் ஒரு காட்சியாம். அதில் இவரும் ஓடி வந்தது மட்டுமில்லாமல், அஜித்தின் அருகில் நிற்பது போலவும் ஒருசில காட்சிகள் எடுத்தார்களாம்.

திருப்புமுனை

திருப்புமுனை

அதை தொடர்ந்து பொல்லாதவன் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். பிறகு, 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் தான் டேனியலுக்கு சிறப்பான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

English summary
Comedian Daniel Annie pope acted in the movie 'Idharkuthane aasaipattai balakumara' with vijay sethupathi. He recently made a comedy entertainer with Gautham Karthik in 'Oru nalla naal paathu solren'. Daniel makes his debut in Ajith's Paramasivan' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil