»   »  விக்ரமுடன் முதல்முறையாக ஜோடி சேரும் காமெடியன்!

விக்ரமுடன் முதல்முறையாக ஜோடி சேரும் காமெடியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'சாமி'.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் 'சாமி 2' படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரி, பிரபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்களாம்.

 படக்குழு :

படக்குழு :

விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ப்ரியன், இசை தேவிஸ்ரீ பிரசாத், ஸ்டன்ட் கனல் கண்ணன் என படத்தின் விவரங்களை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

விக்ரம் - சூரி :

விக்ரம் - சூரி :

சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக முன்னணி காமெடியனாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் சூரி. ஆனால் இதுவரை விக்ரம் உடன் இணைந்து நடித்ததில்லை. முதல்முறையாக விக்ரமுடன் இணைந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படத்தில் நடிக்க இருக்கிறார். முதல் பாகத்தில் காமெடியனாக விவேக் நடித்திருந்தார்.

விக்ரம் - பிரபு :

விக்ரம் - பிரபு :

அதேபோல், 2010-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன்' படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்த பிரபு, தற்போது 'சாமி 2' படத்தில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் .

ஷூட்டிங் :

ஷூட்டிங் :

'ஸ்கெட்ச்' படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது 'துருவ நட்சத்திரம்' படத்திற்காக ஜார்ஜியா சென்றுள்ளார் விக்ரம். இந்த ஷெட்யூல் முடிவடைந்ததும் திருநெல்வேலியில் துவங்கவுள்ள 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் விக்ரம்.

English summary
The second part of 'Saamy' will be lead by Vikram. The details about cast and crew of the film are officially released. Comedian Soori to pair with Vikram for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil