ஒரு வயது மகள் செய்த காரியம்...சதீஷ் பகிர்ந்த ஃபன்னி ஃபோட்டோ...இன்ஸ்டாவில் குவியும் லைக்குகள்

சென்னை : கோலிவுட்டில் டாப் காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். பல படங்களில் காமெடியனாக கலக்கி வரும் சதீஷ், விரைவில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்க போகிறார். டாப் ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருக்கும் சதீஷ் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார்.

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த தமிழ் படத்தின் மூலம் நடிகரான சதீஷ், சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, எதிர் நீச்சல், மான் கராத்தே, ரெமோ, விஜய் நடித்த கத்தி, தனுஷ் நடித்த தங்க மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். தமிழ் படம் 2 ல் வில்லன் ரோலிலும் நடித்துள்ளார்.

படிக்கும் போதே சினிமாவின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கிரேஸி மோகன் ட்ரூப்பில் சேர்ந்து 8 வருடங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். கிரேஸி மோகன் ட்ரூப்பில் சேரும் போது சதீஷுக்கு வயது 14 தான். பிரபலமான கிரேஸி மோகன் நாடகமான சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திலும் சதீஷ் நடித்துள்ளார்.

வசன எழுத்தாளர்

வசன எழுத்தாளர்

பிறகு ஏ.எல்.விஜய்யிடம் பொய் சொல்ல போறோம் படத்தில் இணை வசன எழுத்தாளராக பணியாற்றினார். அதற்கு பிறகு செர்ரி, மதராசப்பட்டினம் போன்ற படங்களில் சிறிய ரோல் நடித்தார். கத்தி, தங்கமகன், ரெமோ போன்ற படங்களுக்காக சிறந்த காமெடியன் விருதுகளையும் பெற்றுள்ளார். மேடை நாடகங்களுக்காக கமல் கையில் கூட விருது வாங்கி உள்ளார் சதீஷ்.

மகளுடன் அழகிய தருணம்

மகளுடன் அழகிய தருணம்

இவருக்கு 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சதீஷுக்கு தற்போது ஒரு வயதில் நிஹாரிகா என்ற மகள் உள்ளார். பொதுவாக சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள், வீடியோக்கள், பட பூஜை போன்ற ஃபோட்டோக்களை தான் வெளியிடுவது வழக்கம். திருமண நாள் அன்று மட்டும் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்தார். மகள் பிறந்த பிறகு, தனது விரல்களை மகள் பிடிப்பது போன்ற ஒரு சில ஃபோட்டோ, வீடியோக்களை மட்டுமே பகிர்ந்துள்ளார்.

என்னையும் கூட்டிட்டு போங்கப்பா

என்னையும் கூட்டிட்டு போங்கப்பா

இன்று முதல் முறையாக தனது மகள் குறும்பு செய்யும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். சதீஷ் ஷுட்டிங்கிற்காக கிளம்பும் சூட்கேசிற்குள் நிஹாரிகா அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோக்களை தான் சதீஷ் வெளியிட்டுள்ளார். அத்துடன், பெங்களூர் போங்க...காஷ்மீர் போங்க...மும்பை போங்க...எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்க அப்பா என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

சதீஷின் இந்த பதிவிற்கு ஐஸ்வர்யா மேனன், பவித்ர லட்சுமி போன்ற நடிகைகள் கமெண்ட் செய்துள்ளனர். பதிவிட்ட 4 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் இந்த ஃபோட்டோவை பதிவிட்டுள்ளனர். இதை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே நடிகர்கள் அர்ஜுனன் மற்றும் ரமேஷ் திலக்குடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் சதீஷ் பகிர்ந்துள்ளார்.

சன்னி லியோனுடன் ஷுட்டிங்

சன்னி லியோனுடன் ஷுட்டிங்

அத்துடன், ஆமா ஆமா சன்னி லியோன் கூட ஷுட்டிங்...அதுக்கு தான் இவ்வளோ ஹேப்பி என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் சதிஷும் நடிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளத்தான் சதீஷ், அர்ஜுனன் உள்ளிட்டோர் மும்பை சென்றுள்ளனர்.

ஆசிரியர் தின பதிவு

ஆசிரியர் தின பதிவு

சமீபத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கிரேஸி மோகனுடன் இருக்கும் த்ரோபேக் ஃபோட்டோவை சதீஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சதீஷ் மிக இளம் வயதில் இருக்கும் அந்த ஃபோட்டோவில் கிரேஸி மோகன் ஒரு புறமும், மாது பாலாஜி மற்றொரு புறமும் சதீஷின் காதைப்பிடித்து திருகுவது போன்று இருந்தது. அதோடு ஹேப்பி டீச்சர்ஸ் டே என பதிவிட்டிருந்தார் சதீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X