»   »  சிவாவோடு சேர்ந்து விஷாலையும், சூரியையும் கலாய்த்த சதீஷ்... நட்சத்திர கிரிக்கெட் கலகல!

சிவாவோடு சேர்ந்து விஷாலையும், சூரியையும் கலாய்த்த சதீஷ்... நட்சத்திர கிரிக்கெட் கலகல!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நட்சத்திர கிரிக்கெட் கலகல!- வீடியோ

கோலாலம்பூர் : தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது மலேசியாவில் தான் மையம் கொண்டுள்ளனர். நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமாக நட்சத்திர கலை விழா நடந்து வருகிறது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில் நடத்தப்ப்டும் இந்த நட்சத்திர விழாவின் ஒரு பகுதியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் தலைமையில் அணிகளாப் பிரிந்து களம் இறங்குகிறார்கள் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள்.

கேப்டன் கார்த்தி

கேப்டன் கார்த்தி

கோவை கிங்கிஸ் அணிக்கு நடிகர் கார்த்தி கேப்டனாக உள்ளார். இவரது அணியில் நந்தா, விஷ்ணு, அஸ்வின், பசுபதி, கலையரசன், உதயா மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேப்டன் ஜீவா

கேப்டன் ஜீவா

சேலம் சீட்டாஸ் அணிக்கு ஜீவா கேப்டனாக செயல்படுகிறார். இவரது அணியில் பிருத்வி, தினேஷ் மாஸ்டர், சரண், விஜய் வசந்த், நட்டி @ நட்ராஜ், செளந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.

கேப்டன் விஷால்

கேப்டன் விஷால்

மதுரை காளைஸ் அணிக்கு விஷால் கேப்டனாக இருக்கிறார். இவரது அணியில் ரமணா, அசோக் செல்வன், ரிஷி, தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், அஜய், சாகி மற்றும் செந்தில் ஆகியோர் உள்ளனர்.

கேப்டன் விஜய் சேதுபதி

கேப்டன் விஜய் சேதுபதி

ராம்நாடு ரைனோஸ் அணிக்கு விஜய் சேதுபதி கேப்டன். இவரது அணியில் ஜி.வி.பிரகாஷ், ஷாம், பரத், ஆதவ் கண்ணதாசன், போஸ்ட் வெங்கட், வருண், நாகேந்திர பிரசாத், அஸ்வின், கௌதம் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிவகார்த்திகேயன் அணி

சிவகார்த்திகேயன் அணி

திருச்சி டைகர் அணிக்கு சிவகார்த்திகேயன் கேப்டனாக பொறுப்பேற்கிறார். இவரது அணியில் விக்ரம் பிரபு, சூரி, சதீஷ், அருண்ராஜா காமராஜ், சாந்தனு, பிரேம், ஹேமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கேப்டன் கார்த்தி

கேப்டன் கார்த்தி

சென்னை சிங்கம் அணிக்கு 'சிங்கம்' சூர்யா தான் கேப்டன். இவரது அணியில் அருண் குமார், விக்ராந்த், மிர்ச்சி சிவா, உதய், ஹரீஷ், அருண் பாலாஜி, சஞ்சய் பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சூரிக்கு இங்கிலீஷ் கற்றுக்கொடுத்த சிவா

சூரிக்கு இங்கிலீஷ் கற்றுக்கொடுத்த சிவா

கிரிக்கெட் மேட்சின்போது நடிகர் சூரிக்கு ஆங்கிலம் கற்று தருகிறேன் என்று சிவகார்த்திகேயன் கலாய்க்க, அதை தொடர்ந்து ஏன் விஷால் அணியில் இருந்து எங்கள் அணிக்கு வந்தீர்கள் என கேட்டார்.

சூரியையும், விஷாலையும் கலாய்த்த சதீஷ்

சூரியையும், விஷாலையும் கலாய்த்த சதீஷ்

சிவகார்த்திகேயனின் கேள்விக்கு சூரி, "எங்களுக்குள் கருத்து வேறுபாடு" என்று சொல்ல, அதற்கு சதீஷ் "இரண்டு பேருமே கருத்து தானே இருக்கீங்க, பிறகு என்ன வேறுபாடு" எனக் கேட்டு கலாய்த்தார்.

English summary
Star arts festival is held in Malaysia. Suriya, Vishal, Vijay Sethupathi and other actors from Tamil cinema were plays Cricket. Tamil cine Stars teams are listed here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X