ஹீரோவாக மாறும் காமெடி நடிகர் செந்தில்.. டைரக்டர் யார் தெரியுமா!
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக பல ஆண்டுகளாக கோலிவுட்டை ஆண்டுவந்த கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.
முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரின் திரைப்படங்களிலும் காமெடியில் கலக்கி உள்ள செந்தில் மற்றும் கவுண்டமணி இப்பொழுது தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் செந்தில் இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்போது புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கவுண்டமணியுடன் அடிக்கும் லூட்டி
தனது வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வின் மூலம் 90 மற்றும் 80களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் செந்தில், கவுண்டமணியுடன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் திரைப்படங்களில் இவர்களது காமெடி தெறிக்கும்

இருவரையும் ஒரே திரைப்படங்களில்
பெரும்பாலான திரைப்படங்களில் கவுண்டமணி செந்தில் ஒன்றாகவே தோன்றுவதால் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யும் போதும் இயக்குனர்கள் இருவரையும் ஒரே திரைப்படங்களில் புக் செய்து வந்தனர்.

இன்றுவரை ரசிக்கப்பட்டு
கரகாட்டம் திரைப்படத்தில் வரும் வாழைப்பழம் காமெடி, சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வரும் புல் காமெடி என எக்கச்சக்கமான காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இப்போதுள்ள தலைமுறைகளுக்கும் இவர்களின் காமெடியை பிடிக்கிறது.

ஹீரோவாகவும் களமிறங்குகிறார்
நடிகர் கவுண்டமணி ஏற்கனவே பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில் இதுவரை செந்தில் மட்டும் ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்க இப்பொழுது முதன்முறையாக ஹீரோவாகவும் களமிறங்குகிறார்.

ஆயுள் தண்டனை கைதியாக
நடிகர் விதார்த்தின் நடிப்பில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க செந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதில் ஆயுள் தண்டனை கைதியாக மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்க உள்ளார், இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இப்பொழுது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க, இதில் செந்திலுக்கு ஜோடி எதுவுமில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











