Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொதுவா இரண்டு போட்டோ…பாதகமில்லாமல் சாமர்த்தியமாக சூரி செய்த செயல் !
சென்னை : வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வரும் இவர் இப்பொழுது வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு வெளியான சந்தோஷமான செய்தியை தொடர்ந்து, லாக் டவுனில் நடிகர் விமலுடன் வெளியில் சுற்றிய சர்ச்சைகளிலும் சிக்கி வந்த சூரி இப்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை என இருவருக்கும் பாதகமில்லாத வகையில் செய்துள்ள செயல் ஒன்று அனைவரையும் உச்சு கொட்ட வைத்துள்ளது.

வெள்ளந்தியான பேச்சு
தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார்.

சிறு சிறு கதாபாத்திரம்
தீபாவளி, பீமா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களால் பெரிதும் கவனிக்கப் படாமல் இருந்த சூரி, இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சூரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்ததை தொடர்ந்து இவருக்கு மிகப் பெரிய பேரும் புகழும் கிடைத்ததோடு இந்தப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

முன்னணி காமெடி நடிகர்
வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்திலிருந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் காமெடி மிகச்சிறப்பாக பேசப்பட்ட நிலையில் இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து டாப் கியரில் சென்றுகொண்டிருந்த சூரி பல்வேறு முன்னணி நாயகர்களுடன் நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

சகோதரர்களாக பழகி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணைந்து நடித்ததை தொடர்ந்து இவர்கள் நட்பு மேலும் ஆழமாகி இப்பொழுது சகோதரர்களாக பழகி வருகின்றனர். வருத்த படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சூரி காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இக்கூட்டணி இன்று வரை ரஜினிமுருகன், நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து வருகிறது.

மிக நெருக்கமான
அதேபோல் மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் தற்போது பலராலும் உற்று நோக்கப்படும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் சூரி இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் விஜய் சேதுபதிக்கும் மிக நெருக்கமான நண்பராக மாறியிருக்கும் சூரி தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து அடுத்தடுத்த திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பாதகமில்லாமல்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரூ பேக் புகைப்படங்களை பகிர்ந்துள்ள சூரி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என இருவரும் திரையில் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நடிகர் சூரிக்கு மனதளவில் இருவரும் நெருக்கமானவர்களே என்ற அடிப்படையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் ஒரு காட்சியின் புகைப்படத்தையும், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்தபோது ஜீப்பில் நின்று கொண்டு எடுத்தவாறு புகைப்படம் ஒன்றையும் இந்த பதிவில் பதிவிட்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் பாதகமில்லாமல் சாமர்த்தியமாக இந்த பதிவை சூரி பதிவிட்டு இருவரின் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார்.

கடுமையான உடற்பயிற்சி
காமெடி நடிகர்கள் அனைவரும் இப்பொழுது ஹீரோக்களாக கலக்கி வரும் நிலையில், நடிகர் சூரியும் இப்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தை அசுர இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், அதற்காக தனது உடலை கடுமையான உடற்பயிற்சி மூலம் மெருகேற்றி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வலம் வருகின்றன.