»   »  மலையாள 'கதை சொல்லி' நடிகர் விடி ராஜப்பன் மரணம்

மலையாள 'கதை சொல்லி' நடிகர் விடி ராஜப்பன் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் பிரபல கதபிரசங்கம் கலைஞரும் மற்றும் மலையாள திரைப்பட நடிகருமான வி.டி. ராஜப்பன் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜப்பன், கதபிரசங்கம் எனும் கதை சொல்லும் கலையில் தேர்ந்தவர். எழுபதுகளிலும எண்பதுகளிலும் ராஜப்பனின் கதபிரசங்கத்துக்கு அப்படி ஒரு கூட்டம் வரும்.

Comedian V D Rajappan passes away

அவரது கதபிரசங்கங்களில் குமரி எரும, மக் மக், பிரியே நின்ட குற, அமித்து, போது புத்ரி மற்றும் என்னென்னும் குரங்கெட்டான்டெ ஆகியவை என்றும் மறக்க முடியாதவை.

1980களில் தனது திரைப்பட பயணத்தை தொடங்கிய அவர் கக்க, கஸ்ருதிக்கட்டு, கட்டுபோது, குயிலினேதேடி மற்றும் எங்கனெ நீ மறக்கும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் இறுதியாக நடித்த படம் ஓகே சக்கோ கொச்சின் மும்பை.

விடி ராஜப்பனுக்கு மனைவி 2 மகன்களும் உள்ளனர்.

English summary
One of Kerala’s most popular Kadhaprasangam (story telling) artistes and film comedian V.D. Rajappan died on Thursday at a private hospital here, family sources said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil