»   »  எந்தக் கடவுளும் என் மனைவிய காப்பாத்தலையே... கலங்கும் மதுரை முத்து

எந்தக் கடவுளும் என் மனைவிய காப்பாத்தலையே... கலங்கும் மதுரை முத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மனைவி இறந்ததால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் காமெடி நடிகர் முத்து இனிமேல் தனது வாழ்வில் எந்த சாமியையும் கும்பிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்துவின் மனைவி இறந்து போனார். 2 குழந்தைகளுக்கு தாயான அவர் இறந்து போனது பலரது மனதிலும் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மனைவியை இழந்து 2 குழந்தைகளுடன் தவிக்கும் முத்து சாமி கும்பிடப் போய்தான் என் மனைவி இறந்து போனார். அதனால் இனிமேல் தான் சாமி கும்பிடப் போவதில்லை என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

மதுரை முத்து

மதுரை முத்து

தனது நகைச்சுவையால் மற்றவர்களை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் இறந்து போனார். 2 குழந்தைகளின் தாயான அவர் இறந்து போனது தமிழ்த் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் மனங்களில் தீராத வருத்தத்தை ஏற்படுத்தியது.

பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி

கடந்த பிப்ரவரி 3 ம் தேதி சாலை விபத்தில் இறந்து போன வையம்மாள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போதுதான் விபத்தை சந்தித்து இறந்திருக்கிறார். கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளிநாடு சென்றிருந்த முத்துவிற்கு அம்மை நோய் தாக்க, தனது கணவருக்கு அம்மை குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தான் முத்துவின் மனைவி கோயிலுக்கு சென்றாராம்.

பிப்ரவரி 15

பிப்ரவரி 15

வருகின்ற பிப்ரவரி 15 ம் தேதி இருவரின் திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு பிடித்த மாதிரி பல்வேறு ஏற்பாடுகளையும் மனைவிக்குத் தெரியாமல் முத்து செய்திருக்கிறார். அதே போல முத்துவிற்கு கார் ஒன்றை பரிசாக அளிக்கவும் அவரது மனைவி திட்டமிட்டு இருந்தாராம்.

கடவுளே வேண்டாம்

கடவுளே வேண்டாம்

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "எந்த நேரமும் சாமியைக் கும்பிட்ட என் மனைவியை எந்தக் கடவுளும் வந்து காப்பாத்தவில்லை. அதனால இனிமே நானும் எந்தக் கடவுளையும் கும்பிடப் போறதில்லை. என்னோட வீட்டுல என் மனைவி வையம்மாளுக்கு கோயில் கட்டி இனிமே அவளை மட்டுமே கும்பிடப் போறேன்" என்று கூறியிருக்கிறார்.

கடவுள் நல்லவங்களத் தான் அதிகம் சோதிப்பாரு போல!

English summary
"Worshiping God is no longer in my life would not" Comedy Muthu Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil