»   »  கார் விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்து மனைவி பலி

கார் விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்து மனைவி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: காமெடிப் பேச்சாளரும் தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி இன்று கார் விபத்தில் பலியானார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மதுரை முத்து, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்து பிரபலமாகத் திகழ்கிறார்.

Comedy actor Madurai Muthu wife killed in road accident

மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது32). இவர்கள் மதுரை தனக்கன்குளத்தில் வசித்து வந்தனர். நிகழ்ச்சி ஒன்றிற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார் வையம்மாள். காலை 7 மணியளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். பலத்த காயம் அடைந்த டிரைவர் கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Popular TV show comedian Madurai Muthu wife Vayyammal (32) was killed in a road accident today at Thirupattur, Sivagangai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil