Raju Srivatsava: ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது ஏற்பட்ட மாரடைப்பு.. காலமானார் காமெடி நடிகர்

மும்பை: பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 58.

1988ம் ஆண்டு அனில் கபூர் நடிப்பில் வெளியான தேஸாப் எனும் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் ராஜு ஸ்ரீவத்சவா.

சினிமா, சீரியல், அரசியல் என பன்முகத் திறமை கொண்ட ராஜு ஸ்ரீவத்சவா காலமான செய்தி பாலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

1963ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா. சத்ய பிரகாஷ் ஸ்ரீவத்சவா எனும் தன்னுடைய இயற்பெயரை சினிமாவுக்காக ராஜு ஸ்ரீவத்சவா என மாற்றிக் கொண்டார். 1988ம் ஆண்டு அனில் கபூர் நடிப்பில் வெளியான தேஸாப் எனும் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் ராஜு ஸ்ரீவத்சவா.

ஜிம்மில் ஏற்பட்ட மாரடைப்பு

ஜிம்மில் ஏற்பட்ட மாரடைப்பு

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது.

ஜிம்மில் ஏற்பட்ட மாரடைப்பு

ஜிம்மில் ஏற்பட்ட மாரடைப்பு

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது.

காலமானார் காமெடி நடிகர்

காலமானார் காமெடி நடிகர்

சமீப காலமான விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் நிலையில், பாலிவுட் காமெடி நடிகரான ராஜு ஸ்ரீவத்சவாவுக்கு

மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல படங்கள்

பல படங்கள்

பிரபல பாலிவுட் படமான பாஸிகர் படத்தில் கல்லூரி மாணவராக ராஜு ஸ்ரீவத்சவா நடித்துள்ளார். அபய், பிக் பிரதர், பாம்பே டு கோவா, டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஃபிராங்கி உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த இவர் 2017ல் அக்‌ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்துள்ளார்.

சக்திமான் தொடரில்

சக்திமான் தொடரில்

பாலிவுட்டின் சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரது பெயரும் முகமும் ரொம்பவே பரிச்சையமானது. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான சக்திமான் தொடரில் துரந்தர் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவர் பங்கேற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X