»   »  பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ரசாக் கான் மரணம்

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ரசாக் கான் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாரடைப்பின் காரணமாக பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் ரசாக் கான்(62) நேற்று உயிரிழந்தார்.

மும்பையில் வசித்து வந்த ரசாக் கானுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Comedy Actor Razak Khan Died

ஆனால் மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து உயிரிழந்த அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

ரசாக் கானின் மரணச் செய்தி அறிந்து அவரின் உடலுக்கு பாலிவுட் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 4 மணிக்கு ரசாக் கானின் இறுதிச்சடங்குகள் மும்பை பாந்திரா பகுதியில் நடைபெறவுள்ளது. கடைசியாக 'கியா கூல் ஹைன் ஹம் 3' படத்தில் ரசாக் கான் நடித்திருந்தார்.

English summary
Bollywood Comedy Actor Razak Khan(62) Died Yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil