Robo Sankar: திடீரென சரிந்து விழுந்த ரோபோ சங்கர்.. மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின் பொது மயங்கி விழுந்த அவரை, சக நடிகர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி இன்று காமெடி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் ரோபோ சங்கர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ரோபோ சங்கர். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் ஜாக்கெட் எம்எல்ஏ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதில், இன்னைக்கு காலையில் 6 மணி என்கிற காமெடியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

Robo Shankar hospital

ரோபோ சங்கர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைத்து காணப்பட்டார். மஞ்சள் காமாலை வந்து அவர் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார், மீண்டும் அவர் பிழைப்பதே கஷ்டம் என அனைவரும் பேசிய நிலையில், அதில் இருந்து மீண்டு வந்த தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை அனைவரும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு அம்பானி வீட்டு கல்யாணம் போல நடத்தினார். தற்போது, ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதி: சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, படப்பிடிப்பின்போது அவர் மயக்கமடைந்துள்ளார். இதனால், பதறிப்போன சக நடிகர்கள் அவரை மீட்டு, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் ரோபோ சங்கர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X