Robo Shankar: நடிக்க வரலனா? என்ன ஆகி இருப்பேன் தெரியுமா? ரோபோ சங்கர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனது தனித்துவமான வித்தியாசமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்பு பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். இந்நிலையில், படப்பிடிப்பின் போது ரத்தவாத்தி எடுத்து மயங்கி விழந்த ரோபோ சங்கர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பலரை வயிறு வலிக்க சிரிக்க வைத்த ரோபோ சங்கர் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இணையத்தில், அவரின் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரோபோ சங்கர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2' போட்டியாளராக கலந்து கொண்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நான் மட்டும் நடிகராக வில்லை என்றால், நிச்சயம் ஒரு பாடி பில்டராகி இருப்பேன். நான், ஒரு தொகுப்பாளராக, மிமிக்ரி ஆர்டிஸ்டாகத்தான் வந்தேன். நடிக்க வரவில்லை என்றால், ஏதோ ஒரு டீக்கடையில் டீ ஆத்திக்கொண்டு இருந்திருப்பேன். இல்லை என்றால் ஏதாவது ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராகி இருந்திருப்பேன்.

Robo shankar priyanka robo shankar
Photo Credit:

பரோட்ட கடையில் வேலை பார்த்து இருப்பேன்: எனக்கு வாழ்க்கை கொடுத்தது பாலாஜி மோகனும், தனுஷ் சாரும் தான். இவர்கள் இருவர் தான் எனது அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார்கள். அடுத்ததாக இயக்குநர் கோவிந்த், என்னுடைய உடல் மொழியை மாற்றினார். இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை மொத்தமாக மாற்றினார். அதிலிருந்து தான் எனது வளர்ச்சி ஆரம்பமானது. ஒருவேளை நடிக்க வரவில்லை என்றால், எங்கோயோ ஏதோ ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு, என் வாழ்க்கை எப்படியோ போயிருக்கும். இல்லை என்றால் மிஸ்டர் இந்தியாவில் பாடி பில்டராகி, ஐ.சி.எஃப். இல் ஒரு பெரிய பாடி பில்டராக இருந்திருப்பேன் என்று அதில் பேசி உள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X