Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் விற்றுத் தீர்ந்தது.. லைகா அறிவிப்பு!
சென்னை : நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.
கோலிவுட்டின் காமெடி கிங்காக இருந்துவந்த வடிவேலு தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சினிமாவில் நடிப்பதை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
பாபா ரீ-ரிலீஸ்..ரஜினி முடிவெடுத்தது எதனால்?..2-கே கிட்ஸை குறி வைக்கும் படமா? ..வெற்றி கிடைக்குமா?

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு கோலிவுட்டின் காமெடி கிங்காக வலம் வந்தார். துவக்கத்தில் என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்த வடிவேலு, தொடர்ந்து ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் நடித்தவர் சில காலங்கள் நடிப்பதில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டார். இந்நிலையில் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
டிசம்பர் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் வடிவேலு பாடியுள்ள அடுத்தடுத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. முதலில் அப்பத்தா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பணக்காரன் என்ற பாடலும் வெளியானது.

முழு நீள காமெடிப்படம்
இந்தப் படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், வடிவேலு நீண்ட நாட்களுக்க பிறகு நடித்துள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. முழு நீள காமெடித் திரைப்படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

சாட்டிலைட் -ஓடிடி ரைட்ஸ்
இதனிடையே இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரைட்ஸ் குறித்த அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் ஒடிடி உரிமையை நெட்பிளிக்சும் கைப்பற்றியுள்ளதாக லைகா தெரிவித்துள்ளது. படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், மிகப்பெரிய தொகைக்கு இந்த உரிமைகள் விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது.

இரண்டாவது இன்னிங்ஸ்
கடந்த 2017ம் தேதி வெளியான விஜய்யின் மெர்சல் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த வடிவேலு தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்சும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.