நிஜப் பேய் பங்களாவில் நடந்த ஷூட்டிங்.. உண்மையான பேய்களை பார்த்து பயத்தில் அலறிய 'மேகி' படக்குழு!
உண்மையான பேய் பங்களாவில் எடுக்கப்பட்ட மேகி திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.
சென்னை: கொடைக்கானலில் உள்ள உண்மையான பேய் பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளது மேகி திரைப்படம்.
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் மேகி. ரியா,நிம்மி ,ஹரிணி என மூன்று கதாநாயகிகள் படத்தில் நடித்து உள்ளனர் .
இப்படம் முழுக்க முழுக்க கொடைக்கானல் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் சூசைட் பாயிண்ட் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், 120 ஆண்டுகள் பழைமையான பங்களாவில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

காமெடி பேய் படம்
படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திகேயன், " மேகி ஒரு காமெடி ஹாரர் படம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் மேகி உருவாகியுள்ளது.

கொடைக்கானலில் சுற்றுலா
கதைப்படி நண்பர்கள் ஐந்து பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது அவர்களது வாகனம் பழுதாகிவிடுகிறது. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் ஒரு பெண் இருக்கிறார். அவரிடம் சென்று உதவி கேட்கிறார்கள்.

பேயிடம் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்
ஆனால் அந்த பங்களாவில் இருக்கும் பெண் தான் 'மேகி' பேய். அந்த பேயிடம் ஐந்து பேரும் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் திருடன் ஒருவனும் சேர்ந்து மாட்டிக்கொள்கிறான். அவர்கள் அனைவரும் அந்த பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரில்லிங்காக சொல்லிருக்கிறேன்.

பேய் மார்க்கெட்
பேய் படத்துக்கு என ஒரு மார்க்கெட் எப்போதும் இருக்கிறது. அதனால் தான் தைரியமாக பேய் படம் எடுத்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சூசைட் பாயிண்ட் அருகில் உள்ள 120 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தை வாடகைக்கு எடுத்தோம்.

நிஜமான பேய் பங்களா
அந்த பங்களா நிஜமாகவே ஒரு பேய் பங்களா. அங்கு ஏற்கனவே நிறைய பேர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்திய போது, எங்கள் யூனிட்டை சேர்ந்த சிலர் ஏதோ உருவங்களை எல்லாம் பார்த்ததாக சொன்னார்கள்.

22ம் தேதி ரிலீஸ்
ஆனால் நான் எதையும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தியது உண்மையிலேயே திரில்லிங்காக தான் இருந்தது. மேகி திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது". இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











