»   »  நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சமாக இருக்கிறதே: பாண்டு கவலை

நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்கு பஞ்சமாக இருக்கிறதே: பாண்டு கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றபோதிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் பாண்டு தெரிவித்துள்ளார்.

மதுரை நகைச்சுவை மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,

வறட்சி

வறட்சி

நகைச்சுவை இயற்கையாக அமைய வேண்டிய விஷயம். தமிழ் திரையுலகில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் நகைச்சுவை மக்களை சென்றடைவதால் படங்களில் வரும் நகைச்சுவைக்கான முக்கியத்துவம் போய்விட்டது.

வடிவேலு

வடிவேலு

தமிழ் சினிமாவில் மதுரை வட்டார மொழி நகைச்சுவைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நகைச்சுவை

நகைச்சுவை

பெரிய பெரிய நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் இல்லை. நகைச்சுவை பஞ்சத்தை போக்க தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ் ஆகியோர் மீண்டும் பிறந்து வர வேண்டும்.

வசனம்

வசனம்

மக்களை சிந்திக்க வைக்கும்படியான வசனங்கள் நகைச்சுவை காட்சிகளில் இருக்க வேண்டும். நகைச்சுவை காட்சிகள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

English summary
Actor Paandu said that inspite of having so many comedians there is a scarcity for comedies in Tamil cinema now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos