»   »  ராஜா ராணி, தெறி படங்கள்ல இதெல்லாம் கவனிச்சீங்களா?

ராஜா ராணி, தெறி படங்கள்ல இதெல்லாம் கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ராணி, தெறி என அடுத்தடுத்து 2 படங்களை அட்லீ இயக்கி விட்டார்.

ராஜா ராணி வெற்றியால் 2 வது படத்திலேயே விஜய்யை இயக்கும் அதிர்ஷ்டம் அட்லீக்கு கிடைக்க, விஜய்-அட்லீ கூட்டணியில் கடந்த வாரம் வெளியான தெறி உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.


இந்நிலையில் அட்லீ படங்களில் இருக்கும் பொதுவான ஒற்றுமைகளை இங்கே பார்க்கலாம்.


தந்தை மட்டுமே

தந்தை மட்டுமே

ராஜா ராணி, தெறி 2 படங்களிலுமே ஹீரோயினுக்கு தந்தை மட்டுமே இருப்பார். ராஜா ராணியில் சத்யராஜ் நயன்தாராவுக்கு தந்தையாக நடித்திருந்தார். அதே போல தெறி படத்திலும் சமந்தாவுக்கு தந்தை மட்டுமே, தாய் கிடையாது.


ஹீரோயின் பர்ஸ்ட்

ஹீரோயின் பர்ஸ்ட்

இரண்டு படங்களிலுமே ஹீரோயின் தான் முதலில் காதலை சொல்வார்கள். ராஜா ராணியில் நயன்தாரா, ஜெய்யிடம் தனது காதலைக் கூற, தெறியில் சமந்தா, விஜய்யிடம் முதலில் காதலைக் கூறுவார்.


ஹீரோ கண்ணெதிரே

ஹீரோ கண்ணெதிரே

இரண்டு படங்களிலும் ஹீரோ கண்முன்னால் ஹீரோயின் இறந்து போவார்கள். ராஜா ராணியில் ஆர்யா கண் முன்னால் நஸ்ரியா அடிபட்டு இறப்பார். தெறியில் விஜய் கண் முன்னால் சுடப்பட்டு சமந்தா இறப்பார்.


காமெடியன்

காமெடியன்

2 படங்களிலுமே ஹீரோவின் பிளாஷ்பேக்கை காமெடியன் தான் ஹீரோயினிடம் எடுத்துக் கூறுவார். ராஜா ராணியில் சந்தானம் ஆர்யாவின் பிளாஷ்பேக்கைக் கூற, தெறியில் மொட்டை ராஜேந்திரன், விஜய்யின் பிளாஷ்பேக்கை எமி ஜாக்சனிடம் எடுத்துக் கூறுவார்.


English summary
Common Scenes in Raja Rani and Theri Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil