»   »  இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்: விஜய் மீது போலீசில் புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்: விஜய் மீது போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மக்கள் முன்னணி இளைய தளபதி விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.

அட்லீ இயக்கி வரும் படத்தில் விஜய் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தனது இளைய தளபதியை ஓவியமாக வரைந்துள்ளார். அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


Complaint given against Vijay

அந்த ஓவியத்தில் விஜய் காலில் ஷூ அணிந்து கையில் திரிசூலத்தை வைத்து நடனமாடுவது போன்ற போஸில் நிற்கிறார். அந்த ஓவியம் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.


மேலும் இது குறித்து விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது இந்து மக்கள் முன்னணி. இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை.


ரசிகரின் ஓவர் பாசத்தால் விஜயக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

English summary
Hindu Makkal Munnani has given a complaint against Vijay in the Chennai police commissioner's office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos