twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹலோ.. வாணி போஜனா.. நைட்டெல்லாம் தூங்க முடியல.. ஆபாசமா பேசுறாங்க.. இயக்குநர் மீது கமிஷனரிடம் புகார்!

    |

    சென்னை: ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் மீது பூபாலன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலக்ததில் புகார்
    அளித்துள்ளார்.

    நடிகர் அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்த படம் ஓ மை கடவுளே. சீரியல் நடிகையான வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அடியெடுத்து வைத்தார்.

    நகைச்சுவை கலந்த காதல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் அஷ்வர் மாரி முத்து இயக்கி இருந்தார்.

    அஷ்வத் மாரிமுத்து

    அஷ்வத் மாரிமுத்து

    'அக்ஸ்ஸ் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை இயக்கியிருந்தது. இந்தப் படம் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது முதல் படம் என்று தெரியாத வகையில் படத்தை இயக்கியிருந்தார்.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருந்தார். அவருக்கு அசிஸ்டன்ட்டாக நடிகர் ரமேஷ் திலக் நடித்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பூபாலன் என்பவர் புகார் அளித்திருக்கிறார்.

    வாணி போஜனா?

    வாணி போஜனா?

    அதாவது, படத்தில் ஒரு காட்சியில் நடிகை வாணி போஜனின் நம்பர் என ஒரு போன் நம்பர் ஷேர் செய்யப்பட்டது. இந்த நம்பரை கவனித்த ரசிகர் பெருமக்கள் நள்ளிரவில் போன் செய்து, வாணி போஜனா.. வர்றீயா என கேட்டு மிகவும் ஆபாசமாக பேசி உள்ளனர். இந்நிலையில் அந்த நம்பர் பூபாலன் என்பவரின் எண் என தெரியவந்துள்ளது.

    ஆபாச பேச்சு

    ஆபாச பேச்சு

    தொடர்ந்து வந்த போன் கால்களால் நொந்து போன தொலைபேசி எண்ணுக்கு சொந்தக்காரரான பூபாலன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரி முத்து மீது புகார் அளித்துள்ளார். தனது தொலை பேசி எண்ணை தன்னுடைய அனுமதியின்றி தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறியுள்ளார்.

    தேவையற்ற அழைப்புகள்

    தேவையற்ற அழைப்புகள்

    இதனால் தனது நம்பருக்கு இதுவரை 50க்கும் மேற்பட்ட தேவையற்ற அழைப்புகள் வந்துள்ளதாகவும் தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் பூபாலன். ஏற்கனவே பாலிவுட் முதல் கோலிவுட் வரை இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A Man complaints to Chennai police commissioner office on Oh My Kadavule movie director Ashwath Marimuthu. Phone number used in Movie is belongs to a customer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X