பூம் பூம் மாட்டுக்காரருக்கு அடித்த ஜாக்பாட்.. தன் இசையில் வாசிக்க வாய்ப்பு.. ஜீவி பிரகாஷ் அறிவிப்பு!
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவருக்கு தனது இசையில் வாசிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருப்பது நெகிழச் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ்.
குசேலன், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட பல படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

கேரண்டியான ஹீரோ
டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். நடித்த படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ஹிட் கொடுத்துள்ளதால் கேரண்டியான ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

பூம்பூம் மாட்டுக்காரர்
நடிப்பில் பிஸியாக இருந்த போதும் இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராகவும் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவருக்கு தனது இசையில் வாசிக்க வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

துல்லியமாக வாசிக்கிறார்
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் நாதஸ்வரம் வாசித்தப்படி யாசகம் கேட்கும் வீடியோ ஒன்றை ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார். மேலும் இந்த நபரை நாம் கண்டுபிடிக்க முடிந்தால், அவரை ரெக்கார்டிங்குக்கு பயன்படுத்தலாம். மிகவும் திறமையான மற்றும் நல்ல துல்லியமாக வாசிக்கிறார்.. திறமைசாலி என்று பதிவிட்டிருந்தார்.

விரைவில் ரெக்கார்டிங்
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், அவருடைய பெயர் நாராயண் என்று கூறி அவருடைய மொபைல் நம்பரையும் ஷேர் செய்தார். அந்த பதிவை பார்த்த ஜிவி பிரகாஷ், அருமை.. ஒரு டன் நன்றி.. என் மக்கள் அவருடன் பேசுவார்கள். அவருடன் வரும் மாதங்களில் விரைவில் ரெக்கார்டிங் செய்ய முடியும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
இந்த பூம் பூம் மாட்டுக்காரர் பெங்களூரு தெருக்களில் நாதஸ்வரம் வாசிக்கிறார் என தெரிகிறது. ஏழ்மையான திறமைசாலிக்கு ஜிவி பிரகாஷ் வாய்ப்பு கொடுக்க முன் வந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Composer GV Prakash gives chance a man who plays Nathaswaram with Boom Boom cow on the streets. GV Prakash says soon he will having recording with him.


Click it and Unblock the Notifications











