twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரம் படங்களைக் கடந்ததை ஒரு சாதனையா நினைக்கவில்லை! - இளையராஜா

    By Shankar
    |

    சென்னை: ஆயிரம் படங்களைக் கடந்ததையெல்லாம் ஒரு சாதனையாக நான் நினைக்கவில்லை, என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

    சமீபத்தில் அவர் தமிழ் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவரது ஆயிரம் பட சாதனை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் பேட்டி எடுத்த தேனி கண்ணன்.

    Composing for 1000 plus films is not a record for me, says Ilayaraaja

    இதற்கு இளையராஜா அளித்துள்ள பதில்:

    "இதையெல்லாம் நான் சாதனையாகவே நினைக்கவில்லை. ஏதோ வாழ்க்கையை ஒட்டி வந்திருப்பதாகவே நினைக்கிறேன். காரணம் நான் செய்கிற வேலையில் இருக்கும் தவறு எனக்குத் தெரியும். அதனால் நான் அமைதியாக இருந்துவிடுகிறேன்.

    நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் பாடல்களில்கூட அந்தத் தவறு இருக்கிறது. இது எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். சரிகமபதநி என்கிற ஏழு ஸ்வரங்களைத்தான் நான் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

    என்னால் புதிதாக ஒரு ஷட்ஜமத்தை உருவாக்க முடியுமா? ஏற்கனவே இருந்தவற்றிலிருந்துதான் பாடல்களை அமைக்கிறேன். இதில் என்ன சாதனை இருக்கிறது.

    இந்தக் கின்னஸ் ரெக்கார்ட், உலக ரெக்கார்ட் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இதையெல்லாம் மிஞ்சிய சாதனைகள் பதிவு செய்யப்படாமலே இருக்கின்றன.

    என்னைப் பொறுத்தவரை சாதனை என்பது இசையில் நான் அதைச் செய்திருக்கிறேன் இதைச் செய்திருக்கிறேன் அவார்டு வாங்கியிருக்கிறேன் என்பதல்ல!"

    ஜெயகாந்தன்

    இந்தப் பேட்டியின்போது, தனது ஆதர்ச எழுத்தாளராக ஜெயகாந்தனைக் குறிப்பிட்டுள்ள இளையராஜா, அவரது வாழ்க்கையை ஒரு ஆவணப் படமாக தான் பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    In an interview, Maestro Ilayaraaja says that composing for 1000 plus movie is no a record for him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X