»   »  சமாதானமான “சண்டைக்கோழி”கள்... விரைவில் ஷூட்டிங்?

சமாதானமான “சண்டைக்கோழி”கள்... விரைவில் ஷூட்டிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சண்டகோழி 2 படம் கைவிடப்பட்டது தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் தற்போது சமாதானமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் அப்பட வேலைகள் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற படம் சண்டைக்கோழி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், அப்பாவாக ராஜ்கிரணும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், லிங்குசாமியின் வேட்டை, அஞ்சான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் அவர் சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

சண்டைக்கோழி 2...

சண்டைக்கோழி 2...

முதல்பாகத்தைப் போலவே விஷாலே இப்படத்திலும் ஹீரோவாக நடிப்பார் எனக் கூறப்பட்டது. கூடவே, அப்படத்தை அவரே தயாரிப்பது எனவும் முடிவானது. மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் ஆகிவிட்டதால், இரண்டாம் பாகத்தில் தமன்னா தான் நாயகி எனவும் தகவல்கள் வெளியானது.

புகார்...

புகார்...

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், திடீரென அப்படம் கைவிடப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார் விஷால். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும் அவர் புகார் அளித்தார்.

14 மாதங்கள் காத்திருந்தேன்...

14 மாதங்கள் காத்திருந்தேன்...

அதோடு, ‘இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். இது தொடங்காததால் தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன். 15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது.

கடைசி நேரத்தில் தகவல்...

கடைசி நேரத்தில் தகவல்...

என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்கான முன்தயாரிப்பு வேலைகளை நிச்சயம் 2 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருப்பார். அப்போதே என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திரைக்கதையின் இறுதி வடிவம் குறித்து கேட்டபோதுதான் அல்லு அர்ஜுனின் படம் பற்றி தகவல் தெரிவித்தார்.

முன்பணம்...

முன்பணம்...

தொழில்முறையில் இது சரியல்ல. இதற்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். சண்டகோழி 2 தயாரிப்பாளராக முன்தயாரிப்பு வேலைகளுக்குச் செலவு செய்துள்ளேன். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன்.

விளக்கம்...

விளக்கம்...

இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்" என விஷால் விளக்கமும் அளித்தார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சண்டைக்கோழி படம் பாதியில் நின்றது.

சமாதானம்...

சமாதானம்...

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, சண்டைக்கோழி இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் சமீபத்தில் நேரில் பேசி சமாதானம் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் விரைவில் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said that the problem between Director Lingusamy and actor Vishal was settled down. So, Sandakozhi 2 may commence soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil