twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சூரி, குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    By Siva
    |

    சென்னை: நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கலந்து கொள்ளவில்லை. தான் போராட்டத்தில் கலந்து கொள்ளாததன் காரணத்தை சூரி ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

    மரணம்

    பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்! என்று ட்வீட்டியுள்ளார் சூரி.

    அனுதாபம்

    சூரியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

    சூரி

    சூரி

    பரவாயில்லை சூரி நீங்களாவது உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். திரையுலகினரோ மவுன விரதம் என்று கூறி போராட்ட பந்தலில் சிரித்து பேசிவிட்டு சென்றனர் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம்

    திரையுலகினர் காலை உணவை சாப்பிட்டுவிட்டு வந்து பேசி சிரித்து மகிழ்ந்துவிட்டு மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு கிளம்பிய நிலையில் நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதை பாராட்டுகிறோம் என்கின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Comedian Soori tweeted that he skipped the protest conducted by Kollywood celebs over Cauvery issue on sunday as his aunt passed away.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X