»   »  24: இசை வெளியீட்டுத் தேதி வெளியானது.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

24: இசை வெளியீட்டுத் தேதி வெளியானது.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் இசை வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 24.


இப்படத்தில் ஹீரோ, வில்லனாக சூர்யாவே நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


24

24

யாவரும் நலம் விக்ரம் குமார் இயக்கத்தில் டைம் டிராவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தில் விஞ்ஞானி, வயதான வில்லன், பைலட் போன்ற 3 விதமான கெட்டப்பில் சூர்யா நடித்திருக்கிறார். பைலட் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும், விஞ்ஞானி சூர்யாவுக்கு ஜோடியாக நித்யாமேனனும் நடித்துள்ளனர்.


டீசர்

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக டீசரில் மிரட்டிய ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'காலம் என் காதலி' ஒற்றைப்பாடல் பெரும்பாலான ரசிகர்களின் கலர் டியூனாக மாறியது.


பாடல்கள் வெளியீடு

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான, ராஜசேகர் நேற்று வெளியிட்டிருக்கிறார். அதன்படி வருகின்ற 11ம் தேதி காலை 9 மணியளவில் சத்யம் திரையரங்கில் இப்படத்தின் தமிழ்ப் பாடல்கள் வெளியாகின்றன. அன்று மாலை 6 மணியளவில் 24 படத்தின் தெலுங்குப் பாடல்கள் ஹைதராபாத்தில் வெளியாகின்றன.


வெளியீடு

வெளியீடு

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தை சல்மான் அல்லது ஹிருத்திக்ரோஷனை வைத்து இந்தியில் ரீமேக் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


படக்குழுவின் இந்த அறிவிப்பால், சூர்யா ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.English summary
Suriya's 24 Audio Launch Date Now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil