»   »  ஒருவழியாக.... மார்ச் 4 ல் வெளியாகிறது சூர்யாவின் 24 டீசர்

ஒருவழியாக.... மார்ச் 4 ல் வெளியாகிறது சூர்யாவின் 24 டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 24 படத்தின் டீசர், மார்ச் 4 ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று சூர்யா அறிவித்திருக்கிறார்.

Select City
Buy Sadrishavakyam 24:29 (U/A) Tickets

சூர்யா நடிப்பில் பல மாதங்களாக உருவாகி வந்த 24 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Confirmed: 24 Teaser from March 4

இந்நிலையில் 24 படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா நேற்று அறிவித்திருக்கிறார்.இது குறித்து சூர்யா ''24 படத்தின் டீசர் மார்ச் 4 ம் தேதி மாலை 6 மணியளவில்'' வெளியாகும் என்று கூறியிருக்கிறார். சூர்யாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அலை, யாவரும் நலம் படங்களுக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படம் அறிவியல் கலந்த திகில் கதையாக உருவாகி இருக்கிறது.


அஞ்சான் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் சமந்தா. சமந்தாவைத் தவிர மற்றொரு நாயகியாக நித்யா மேனனும் படத்தில் நடித்திருக்கின்றனர்.


சூர்யாவின் 24 டீசர் வெளியாகும் அதே தேதியில், கார்த்தியின் தோழா படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


English summary
Confirmed: 24 Teaser from March 4. Surya Tweeted "#24Teaser on Friday 4th, March 6pm".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil