»   »  எந்திரன் 2: ரஜினியுடன் "டிஷ்யூம் டிஷ்யூம்" போடப் போகிறார் அக்ஷய் குமார்!

எந்திரன் 2: ரஜினியுடன் "டிஷ்யூம் டிஷ்யூம்" போடப் போகிறார் அக்ஷய் குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2 படத்தில் அவருடன் வில்லனாக அக்ஷய் குமார் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எந்திரன் படத்தைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தற்போது இயக்குநர் ஷங்கர் இறங்கியிருக்கிறார். எந்திரன் 2 வின் நாயகனாக ரஜினியும் , நாயகியாக எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகத் தேடிவந்த வில்லனை தற்போது ஒருவழியாக இயக்குநர் ஷங்கர் கண்டுபிடித்து இருக்கிறார்.

எந்திரன் 2

எந்திரன் 2

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் எந்திரன் 2 வில் நாயகனாக ரஜினியும், நாயகியாக எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். மேலும் இன்னொரு நாயகியை படத்தில் களமிறக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

நீண்ட நாட்களாக ரசிகர்கள் மனதில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்தைப் பற்றி இயக்குநர் ஷங்கர் முதன்முறையாக நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். ஷங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள EVP அரங்கினுள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

அர்னால்டு

அர்னால்டு

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க ஷங்கர் மற்றும் படக்குழுவினர் சார்பில் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் அர்னால்டின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் ஷங்கர் வில்லனை மாற்றும் முடிவுக்கு வந்து விட்டார்.

அக்ஷய் குமார்

அர்னால்டுக்குப் பதிலாக ஹிருத்திக்ரோஷன் மற்றும் பல நடிகர்கள் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது அக்ஷய் குமார் தேர்வாகி இருக்கிறார். நேற்று இரவு நடிகர் அக்ஷய் குமார் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். "வருடத்தின் இறுதியில் ஒரு கவனிக்கத்தக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எந்திரன் 2 வில் நடிக்கிறேன் மிகவும் உற்சாகமாக இருக்கிறது". என்று அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். அக்ஷய் குமார் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணிக் கலைஞர்கள்

முன்னணிக் கலைஞர்கள்

இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், வசனம் மற்றும் பாடல்களுக்கு மதன் கார்க்கி, ஒளிப்பதிவுக்கு நீரவ் ஷா, விஷுவல் எபெக்ட்ஸுக்கு ஸ்ரீநிவாஸ் மோகன் மற்றும் கலைக்கு முத்துராj போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது கனவுப் படமான எந்திரன் 2 வை ஷங்கர் தொடங்கி இருக்கிறார்.

ஹாலிவுட் கலைஞர்கள்

ஹாலிவுட் கலைஞர்கள்

எந்திரன் 2 வின் விஷுவல் எப்பெக்ட்ஸ் பணிகளை அயன்மேன், அவெஞ்சர்ஸ் மற்றும் ஜுராசிக் பார்க் போன்ற படங்களில் பணியாற்றிய லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் செய்கிறது.படத்தின் சண்டைக் காட்சிகளை டிரான்ஸ்பார்மர்ஸ் பட புகழ் கென்னி பேட்ஸ் வடிவமைக்க உள்ளார்.

English summary
Confirmed: Rajini Starrer Endhiran 2 movie Akshay Kumar Play as the Antagonist in this film. Akshay Kumar Wrote on Twitter "Ending the year on a high note! Super excited to be a part of Robot 2 with the one & only superstarrajini sir!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil