»   »  2016-ல் அல்ல... 2017-ல்தான் பாகுபலி 2!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2016-ல் அல்ல... 2017-ல்தான் பாகுபலி 2!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதற்கான பதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி தெரியவரும் என்று உறுதியான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் 600 கோடியை வசூலித்து சாதனை செய்த படம் பாகுபலி. 600 கோடியை வசூலித்ததன் மூலம் இந்தியளவில் அதிக வசூலைக் குவித்த 3 வது படம் என்ற பெருமையையும் பாகுபலி பெற்றது.

இதனால் இப்படத்தின் 2 வது பாகத்திற்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

பாகுபலி

பாகுபலி

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து கடந்த வருடம் வெளியான படம் பாகுபலி.

தமிழ், தெலுங்கு, இந்தி

தமிழ், தெலுங்கு, இந்தி

பிரபாஸ்க்காக தெலுங்கு ரசிகர்கள் போட்டிபோட்டு பார்த்தார்கள். அதே நேரம் படத்தின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பினால் தமிழ், இந்தி ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாட வசூலில் இந்தி மற்றும் தமிழ்ப்படங்களை பாகுபலி ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டியது.

100 நாட்கள்

100 நாட்கள்

கடந்த வருட ஜூலை மாதம் வெளியான இப்படம் 100 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. பல்வேறு சாதனைகளைப் புரிந்த இப்படம் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற கேள்வியை எழுப்பி ரசிகர்களை சோதிக்கவும் தவறவில்லை.

கடந்த ஆண்டின்

கடந்த ஆண்டின்

கடந்த 2015 ம் ஆண்டின் விடை தெரியாத முக்கிய கேள்விகளில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதே பிரதானமாக இடம்பெற்றது.

பாகுபலி 2

பாகுபலி 2

இந்தக் கேள்விக்கான விடை 2 வது பாதியில் தான் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் பலரும் பாகுபலி 2 விற்காக ஐ ஆம் வெயிட்டிங் என்று காத்திருக்கின்றனர்.

மாற்றி மாற்றி

ஆனால் படக்குழு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அடிக்கடி மாற்றி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹாலிவுட் பாணியில் தற்போது 2017 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகும் என்று படத்தின் விஎப்எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சித்தார்த் ஐயர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கொண்டாடும் ரசிகர்கள்

பாகுபலி 2 வெளியாகும் தேதி தெரிந்தவுடன் ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கம் போல சமூக வலைதளப் பக்கங்களிலும் #Baahubali2 ட்ரெண்டடிக்கத் தவறவில்லை.

வெளியாகுமா?

வெளியாகுமா?

ஏற்கனவே படக்குழு பல தேதிகளை அறிவித்து பின்னர் மாற்றி விடுவதால் இந்தத் தேதியிலாவது படம் வெளியாகுமா? பாகுபலி கொலைக்கான காரணம் தெரியுமா? என்று ரசிகர்கள் மீண்டும் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

409 நாட்கள்

இதற்கிடையில் ரசிகர் ஒருவர் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்பதற்கு நாம் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்பதை புள்ளிவிவரத்துடன் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அதன்படி நாம் இன்னும் 409 நாட்கள் இதற்காக காத்திருக்க வேண்டுமாம். அதுசரி!

English summary
Confirmed: Baahubali 2 Release Date Finalized 14, April 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil