»   »  20ம் தேதி முதல் "இது நம்ம ஆளு".. சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

20ம் தேதி முதல் "இது நம்ம ஆளு".. சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இது நம்ம ஆளு' வருகின்ற 20ம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் பாண்டிராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சிம்பு,நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் என்று பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இது நம்ம ஆளு'.


'இது நம்ம ஆளு' முடிந்து பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளால் இப்படம் வெளியாகாமல் கிடப்பில் கிடந்தது.


Confirmed: Idhu Namma Aalu Release date

இதற்குப்பின் பாண்டிராஜ் இயக்கிய 'கதகளி', 'பசங்க 2' படங்கள் வெளியாகியும் கூட இயக்குநர் பாண்டிராஜால் இப்படத்தை வெளியிட முடியவில்லை.


கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வந்த பாண்டிராஜ், கபாலி டீசருக்குப்பின் 'இது நம்ம ஆளு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தார்.


அதன்படி கபாலி டீசர் வெளியான சிலமணி நேரங்களில் 'இது நம்ம ஆளு' வருகின்ற மே 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.


மற்றொருபுறம் சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரனின் புதுப்பட தலைப்பை இன்று அறிவித்திருக்கின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது டபுள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.


எஸ்பிஐ சினிமாஸ் 'இது நம்ம ஆளு' படத்திற்கான முன்பதிவை ஏற்கனவே தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Confirmed: Simbu, Nayanthara's Idhu Namma Aalu Released on May 20th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil