»   »  ஜூன் 3ல் வெளியாகிறது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'

ஜூன் 3ல் வெளியாகிறது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 3ம் தேதி 'இறைவி' படத்தை வெளியிடவிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார்.

'பீட்சா', 'ஜிகர்தண்டா' வெற்றிப்படங்களுக்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி'. இதில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


Confirmed: Iraivi Released on June 3rd

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்திருக்கிறார்.


இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.


படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்தக் காட்சியையும் நீக்காமல் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.இதையடுத்து வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படத்தை வெளியிடவிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார்.


இதன் மூலம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா' வரிசையில் இறைவி'யும் இணைந்திருக்கிறது தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெறும் படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Confirmed: Karthi Subbaraj's Iraivi Released on June 3rd.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil