»   »  விஜய் சேதுபதியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான நயன்தாரா

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரெமோவைத் தொடர்ந்து மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்திற்கான முதற்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மற்றொருபுறம் சிவகார்த்திகேயன், பாக்யராஜ் கண்ணனின் 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிவாவின் நண்பர் ராஜா தனது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

Confirmed: Nayanthara Pair with Sivakarthikeyan

மேலும் சிவகார்த்திகேயன் -மோகன் ராஜா இணையும் படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்,தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

கதை பிடித்திருந்தால் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்றெல்லாம் நயன்தாரா பார்க்க மாட்டார். இதனை ஏற்கனவே மாயா, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் ஆரி, விஜய் சேதுபதியுடன் நடித்து நயன்தாரா நிரூபித்திருந்தார்.

ரஜினிமுருகன், தனி ஒருவன் என 2 பேருமே வெற்றிகளைக் கொடுத்திருப்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Confirmed: Nayanthara Pair with Sivakarthikeyan for Mohan Raja's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil