»   »  விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமா? காத்திருக்கும் சிறு படங்கள்... குழப்பும் தயாரிப்பாளர்!

விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமா? காத்திருக்கும் சிறு படங்கள்... குழப்பும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடித்த விவேகம் எப்போது வெளியாகும் என தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால் திரைத் துறையோ, 'அறிவித்த தேதியில் படம் வெளியாகுமா ஆகாதா... சொல்லித் தொலைங்கய்யா' என கடுப்பிலிருக்கிறது.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என கடந்த ஒரு மாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் படம் வெளியாக இன்னும் இரு வாரங்கள்தான் உள்ளன. ஆனால் வெளி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.


காத்திருப்பு

காத்திருப்பு

இது அஜித் படம் என்பதால், அவர் படத்துக்குதான் திரையரங்குகள் முன்னுரிமை தரும். எனவே அந்தப் படத்துக்கு ஒரு வாரம் முன்போ பின்போ படங்களை வெளியிடுவது பலன் தராது. எனவே விவேகம் வெளியீட்டுத் தேதியை வைத்து மற்ற படங்களின் தேதியை முடிவு செய்யலாம் என சிறு படத் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.


இழுத்தடிப்பு

இழுத்தடிப்பு

ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல், படம் குறித்த தேதியில் வருமா வராதா என்று கூட உறுதிப்படுத்தாமல் இழுத்தடிக்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் என திரையுலகில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.


சென்சார்

சென்சார்

இந்த நிலையில் படத்தை இப்போதுதான் சென்சாருக்கு அனுப்பியுள்ளதாகவும், சென்சார் சான்று கிடைத்த பிறகு வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார் தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது.


அசராத தரமணி

அசராத தரமணி

விவேகம் வருகிறதோ இல்லையோ... தரமணியை வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார். படத்துக்கான விளம்பரங்கள் தூள் பறக்கின்றன.


English summary
Confusion still continuous in announcing the release date of Ajith's Vivegam movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil